கிராம நிர்வாக தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள்

கிராம நிர்வாக தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் - ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழும் சராசரி 30 முதல் 50 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து எனப்படும் கிராம ஊராட்சிகள் இயங்குகின்றது. இந்த ஒட்டுமொத்த கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. அதாவது ஒரு Revenue Village உள்ளது.

கிராம நிர்வாக தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள்


பட்டா மற்றும் பட்டா சம்பந்தப்பட்ட பணிகளை மட்டுமே கிராம நிர்வாக அலுவலர் செய்வதில்லை. அதற்கும் மேற்பட்ட 34 பணிகளை செய்கிறார். உதாரணமாக கிராம கணக்குகள், பதிவேடுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். நமக்கு தேவையான தகவல்களை நாம் நேரில் சென்று பெறாவிட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற முடியும்.

இதையும் பார்க்க: காணாமல் போன பத்திரம்

தகவல் அறியும் உரிமை சட்டம் 6 ( 1 ) மற்றும் 6 ( 3 ) கீழ் கோரிக்கை மனு

அனுப்புநர்

பெயர்,

முகவரி.

பெறுநர்

திரு. பொது தகவல் அலுவலர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

முகவரி.

மதிற்பிற்குரிய ஐயா,

பொருள்: கிராம தகவல், நிலம், பதிவேடு மற்றும் கிராம கணக்குகளில் நகல்கள் தேவை வேண்டி கோரிக்கை மனு.

உங்களுக்கு என்னென்ன ஆவணங்களின் நகல் அல்லது தகவல் வேண்டுமோ அதன்படி எழுத வேண்டும். மேற்கண்ட தகவல் மட்டும் தான் கேட்க  வேண்டுமென்பதில்லை. மாறாக நிலம் பற்றிய தகவல்கள், சர்வே கற்கள் இல்லை, பொது பாதை, வண்டி பாதை, ஆக்கிரமிப்பு பாதைகள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் Fmb போன்ற தகவல்கள் அனைத்தும் கேட்கலாம்.

இதையும் பார்க்க: அ பதிவேடு நகல்

குறிப்பு

இந்த மனுவிற்கு பதில் வரவில்லை எனில் Rti 19 ( 1 ) பயன்படுத்தி முதல் மேல் முறையீடு விண்ணப்பம் அளிக்கலாம். அதற்கும் பதில் வரவில்லை எனில் Rti 19 ( 3 ) பயன்படுத்தி இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். மேலும் பெறுநரில் வட்டாட்சியர் அலுவலகம் தான் குறிப்பிட வேண்டும்.

இதையும் பார்க்க: இருப்பிட சான்றிதழ்