Fmb என்றால் என்ன

Fmb என்றால் என்ன - Fmb என்பது நில வரைபடம் Sketch ஆகும். ஒரு இடத்தின் சரியான வரைபடத்தை இந்த நிலவரைபடத்தின் மூலம் காணலாம். இது சர்வே எண் அதாவது புல எண்களை கொண்டு வரையப்படும். அது மட்டுமில்லாமல் சர்வே எண்கள் அடங்கிய தொகுப்பும் எனவும் அழைக்கலாம். இந்த புகைப்படம் எடுக்க பட்டா எண் அல்லது சர்வே எண் மற்றும் சப் டிவிஷன் எண் போதுமானது. இப்போது ஆன்லைனில் ஒரு ரூபாய் கட்டணம் இல்லாமல் இலவசமாக எடுத்து கொள்ளலாம். இதற்கு முன்னர் வருவாய்துறையின் அலுவலகத்தில் மனு எழுதி ரூபாய் 20 செலுத்தினால் உங்கள் நிலத்தின் நில படத்தை கொடுப்பார்கள்.

Fmb என்றால் என்ன


அப்படி கொடுக்க மறுத்துவிட்டால் தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் மற்றொரு மனு எழுதி கொடுத்தால் தான் இந்த படத்தை எடுத்து நாம் உபயோகிக்க முடியும். ஆனால் நடைமுறையில் அந்த கஷ்டங்களை அரசாங்கம் நமக்கு தராமல் மிகவும் எளிமையான முறையில் அதனை பதிவிறக்கம் செய்யும் வசதியை அரசாங்கம் நமக்கு கொடுத்திருக்கிறது. அதனை பயனாளர்கள் உபயோகித்து பயன் பெற பட்டா சிட்டா இணையத்தளம் மூலமாக கேட்டு கொள்கிறோம்.

புறம்போக்கு நிலம் வகைகள்

 


மேலே உள்ள புகைப்படத்தின் மொத்த விவரங்களையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

1. படத்தில் எந்த மூலையும் குறிக்கப்படாமல் இருந்தால் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு அடிப்படையில் குறித்து கொள்ளுங்கள்.

2. சிவப்பு கலரில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் ஒவ்வொரு மூலையின் எல்லைகளை குறிப்பதற்காகவும் அந்த இடைப்பட்ட கோட்டில் எவ்வளவு இடம் இருப்பதனை குறிக்கும்.

நிலம் அளக்கும் முறை

3. கருப்பு கலரில் கொடுக்க பட்டிருக்கும் கோட்டினை சர்வே எண் என்றும் லேசான  கருப்பு கலரில் இருப்பதை உட்பிரிவு எண்களை குறிக்கும்.

4. அங்கங்கு புள்ளி புள்ளியாக இருக்கும் கருப்பு லைன் அந்த வரைபடத்தை உருவாக்க தேவைப்படுகிறது. இது முக்கோண வடிவில் இருக்கும்.

5. புகைப்படத்தில் வரைபடத்திற்கு பக்கத்தில் மேலேயும் கீழேயும் ஏதோ ஒரு எண்கள் இருக்கும். அது பக்கத்துக்கு நிலத்தின் சர்வே எண் என எடுத்து கொள்ளலாம்.

6. உங்கள் நிலத்தின் புல வரைபடத்தை தெரிந்து கொள்ள Eservices இணையதளத்தில் சென்று ஐந்தாவதாக இருக்கும் புல வரைபடம் பார்க்க என்பதை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்தால் வரைபடம் உங்கள் கையில்.

குறிப்பு

முக்கியமாக இந்த நில வரைபடம் நம்முடைய நிலம் எவ்வளவு தூரம், அளவீடு, நடைபாதை, தெரு, பக்கத்தில் உள்ள சர்வே எண்கள் போன்றவைகளை எக்ஸாக்ட் ஆக பார்க்க உதவும் ஒரு புகைப்படம் ஆகும்.