ஈசி வில்லங்க சான்றிதழ் ( Ec villanga sandrithal ) - Encumbrance Certificate எனப்படும் வில்லங்கத்தினை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். ஈசி, இசி, வில்லங்கம் இவை அனைத்தும் ஒன்றே தான். வில்லங்க சான்றிதழ் தான் இன்றைய தேதியில் மிகவும் முக்கிய சான்றிதழாக கருதப்படுகின்றது.
நாம் பட்டா என்கிற ஆவணத்தை பார்க்கும்போது தற்போதை நில உரிமையாளர் யார், நிலத்தின் வகைப்பாடு, தீர்வை போன்றவை இருக்கும். அதேபோல் மூல பத்திரத்தில் பார்த்தால் முதல் உரிமையாளர், நில வகைப்பாடு, எல்லை, சொத்து மதிப்பு, சாட்சிகள் போன்றவைகள் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: villangam download
மேற்கண்ட பட்டா மற்றும் பத்திரத்தை வைத்து ஒரு சொத்தினை வாங்க முடியாது. ஏனெனில் வில்லங்கம் போன்ற சான்றிதழில் மட்டுமே அந்த சொத்து தற்போது யார் வசம் உள்ளது, யார் பெயரில் தற்போது உள்ளது, யாரிடம் இருந்து பெறப்பட்டது, அடமானம், கிரையம், கடன் போன்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: அசைன்மென்ட் பட்டா