அசைன்மென்ட் பட்டா

அசைன்மென்ட் பட்டா ( Assignment patta tamilnadu ) ( நிபந்தனை பட்டா என்றால் என்ன ) - பட்டாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளதை நாம் ஏற்கனவே நமது Patta Chitta வெப்சைட்டில் அடிக்கடி பார்த்துள்ளோம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் அசைன்மென்ட் பட்டாவை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். நில எடுப்பு சட்டம் அல்லது நிலம் கையகப்படுத்தும் சட்டம் கீழ் அரசாங்கம் ஆட்சேபனையற்ற தனியார் மற்றும் அரசாங்க நிலத்தினை இல்லாத மக்களுக்கு இலவசமாக கொடுக்கும்.

அசைன்மென்ட் பட்டா


இந்த நிலங்களை அரசாங்கம் சில நிபந்தனைகளோடு தான் கொடுக்கும். அதில் வீட்டடி மனை மற்றும் வேளாண்மை நிலங்கள் என இருவகையாக வகைப்படுத்தி பிரித்து கொடுப்பர். இதனை தாசில்தார் அவர்கள் Verify செய்த பின்னர் மக்களிடம் வழங்குவார்.

இதையும் படிக்கலாமே: TamilNilam

தாசில்தார் அவர்கள் கொடுக்கும் இந்த வகை ஆவண பெயர் தான் அசைன்மென்ட் பட்டாவாகும். இந்த நிலங்கள் 10 ஆண்டுகள் வரை விற்க முடியாது. இதனை நிபந்தனை பட்டா என்றும் நாம் அழைக்கலாம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: Eservices.tn.gov.in patta chitta