நில ஒப்படை பட்டா அரசாணை செய்வது எப்படி

நில ஒப்படை பட்டா அரசாணை செய்வது எப்படி சட்டம் ( நிபந்தனை பட்டா ) - நிலமற்ற மக்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வேளாண்மை நிலங்கள் தருவதே நில ஒப்படை ஆகும். இதனால் நிலமற்ற இருக்கின்ற மக்களுக்கும் முழு நேரம் இருக்கின்ற ஏழை விவசாயிகளும் பயன் பெறுவார்கள் என்பதே இதன் நோக்கம்.

நில ஒப்படை பட்டா அரசாணை செய்வது எப்படி


வீட்டு மனை

வருவாய் நிலை எண் 21 ( 1 ) இன் படி பொது நோக்கத்திற்காக பயன்பட்டு வருகின்ற நிலங்களை நிலம் இல்லாத மக்களுக்கு வழங்கலாம். அப்படி கொடுக்கப்படும் நபருக்கு சொந்தமாக நிலங்கள், வீடு மனை இருத்தல் கூடாது. வருமானம் 16, 000 க்கு மேல் இருக்கக்கூடாது. வீட்டு பெண்கள் மேல் தான் பட்டா மாற்றம் செய்யப்படும். பெண்கள் இல்லையென்றால் ஆணுக்கு நேரடியாக பட்டா மாற்றம் செய்வார்கள். ஒருவேளை விற்கும் நிலை ஏற்பட்டால் 10 ஆண்டுகள் கழித்து தான் விற்க வேண்டும். அப்படி விற்கும் போது அரசின் அனுமதி வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வருவாய் நிலை ஆணை எண்

வேளாண்மை

இதேபோல் வேளாண்மை சார்ந்த நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும். ஆனால் அவர்கள் முழுநேர விவசாயியாக இருக்க வேண்டும். மாநகராட்சி என்றால் அரை சென்ட், நகராட்சி என்றால் ஒரு சென்ட் மற்றும் கிராமப்பகுதிகள் என்றால் மூன்று சென்ட் வீதம் கொடுக்கப்படும். குத்தகைக்கு விடுதல் கூடாது. வாரிசு அடிப்படையில் வருகின்ற வாரிசுகள் நிலங்களை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: நிலம் கையகப்படுத்தும் சட்டம்