வருவாய் நிலை ஆணை எண் ( 15, 21, 23, 24, 26, 26(15), 31, 33, 41, 173 )

வருவாய் நிலை ஆணை எண் ( 15, 21, 23, 24, 26, 26(15), 31, 33, 41, 173 ) Pdf - வருவாய் சம்மந்தப்பட்ட அரசாணைகள் மக்கள்  வைப்பது மிகவும் அவசியமாகும். எந்த ஒரு வருவாய் துறையிலும் அரசு அதிகாரிகள் முறையாக அரசாணைகளை கொண்டு தான் முடிவெடுப்பார்கள் அல்லது ஆணையிடுவார்கள். ஏறக்குறைய வருவாய் நிலை ஆணைகள் 1 லிருந்து 213 வரையும் உள்ளது. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதிகளை பற்றி கூறி இருக்கும். அதில் மிகவும் முக்கியமான 11 நிலை ஆணைகளின் விவரங்கள் மற்றும் அரசாணைகளை பற்றி கீழே பார்ப்போம்.

வருவாய் நிலை ஆணை எண்


வருவாய் நிலை ஆணைகள்

15

நில ஒப்படை ( அரசாங்கம் வேளாண்மை சம்மந்தப்பட்ட தேவைகளுக்காக நிலங்களை விவசாயிகளுக்கு கொடுப்பது.

21

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் அரசு பொது பயன்பாட்டிருக்காக நிலங்கள் இருக்கும். ஆனால் அதனை பயன்படுத்தவில்லை எனில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனை அளிப்பது.

23 - நில மாற்றம்

எண்-24 - அரசு நிலங்கள் உரிமை மாற்றம்

24 ஏ - நிலத்தை குத்தகை விடுவார்கள் ( மூன்று ஆண்டுகள் )

26 - நிலம் ஆக்கிரமணம்

26(15) - பட்டாவில் நிலவியல் மற்றும் கால்வாய் வழிகள் இருந்தால் அதனை ஏற்க வேண்டும்.

31 - பட்டா மாற்றம் செய்தல் ( உரிமையாளர் பட்டா மாற்றம், அரசு உத்தரவு மற்றும் வாரிசுரிமை பட்டா மாற்றம் )

33 - நில உரிமை விடுதல் ( மாவட்ட ஆட்சியர் அங்கீகாரம் கொடுப்பார் )

41 - அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டிய பட்டாதாரர்களின் வரி வசூல்கள் அதாவது தீர்வை ( குத்தகை மற்றும் சொந்த நிலங்கள் )

எண்-173 - நில ஆவணங்களின் நகல்கள் நேரடியாக அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவும் பெறலாம் ( கட்டங்களுக்கு உட்பட்டது ).

வருவாய் ஆய்வாளர் பணிகள் மற்றும் கடமைகள்