நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894 Pdf, 1984, 2013, 2014, 2020 ( land acquisition Act 1894 2023 pdf in tamil ) ( நில எடுப்பு சட்டம் 2013, 2015 ) - நில கையகப்படுத்துதல் அல்லது நில எடுப்பு சட்டம் இவை இரண்டும் ஒன்றே தான். தனியார் நிலங்களை அரசாங்கமானது பொது நோக்கத்திற்காக எடுத்து கொள்ளும் சட்டம் தான் இது. இது பொது நோக்கத்திற்காக மட்டுமே அரசாங்கமானது எடுத்து கொள்ளும். உதாரணமாக பாலம் கட்டுவது, பள்ளி மற்றும் கல்லூரி கட்டுவது, ஏதாவது ஒரு புதிய திட்டத்தினை அமல்படுத்துவது போன்ற பயன்பாட்டிருக்காக எடுத்து கொள்ளலாம்.
இந்த சட்டமானது 1/1894 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிறகு 68/1894 ஆக மாறியது. காலப்போக்கில் 1984 ஆக மறுபடியும் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு திருத்தி மாற்றப்பட்டது.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம்
இந்த நிலங்களை எடுத்து கொள்வதாக இருந்தால் நில எடுப்பு துறையானது சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்திற்கு நோட்டீஸ் மூலமும் கிராம நிர்வாக அலுவலர் மூலமும் தெரியப்படுத்துவார்கள். மேலும் செய்தித்தாளில், இணையத்தளத்தில், பஞ்சாயத்து அலுவலகத்தில் என ஆங்காங்கே நோட்டிஸ் அடிப்பார்கள். 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.
இதையும் படியுங்க: ஆட்சேபனை மனு