ஆடு மாடு கொட்டகை விண்ணப்பம் Pdf 2023 - இலவசமாக தமிழக அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான நலத்திட்டங்கள் வரிசையில் இந்த திட்டம் இருக்கிறது. இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம் இருக்கும் நேரத்திலே இலவச ஆடு மாட்டு கொட்டகை திட்டமும் இருக்கிறது. இதனால் கால்நடை பராமரிக்கும் அல்லது வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மையே பயக்கும் என்பது உண்மையே. இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மாட்டு கொட்டகை அளவுகள் என்று பார்த்தால் ஒரு மாட்டிற்கு குறைந்தபட்சம் 40 சதுர அடியாவது வேண்டும். ஏனென்றால் ஒரு மாட்டிற்க்கு தீவன தொட்டிகள், அழைத்து வர மற்றும் தீவன பயிர்கள் போட கிட்ட தட்ட 40 சதுர அடி வேண்டும்.
கொட்டகைக்கு அப்ளை செய்யும் விண்ணப்பதாரர்கள் இடம் சொந்தமாக வேண்டும். அதிலும் கூட்டு பட்டாவில் இருந்தால் உங்கள் விண்ணப்பம் ரத்து ஆகும். தனி பட்டாவாக மற்றும் விண்ணப்பம் அப்ளை செய்யும் நபர் பெயரிலே பட்டா இருந்தால் நல்லது. மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பால் ஊற்றும் அட்டை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தின் புக் இவை அனைத்தும் மிகவும் கட்டாயமாக கேட்கப்படுகிறது.
மாட்டு கொட்டகை அமைக்க மானியம்
உங்கள் ஊரில் அல்லது பக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் விண்ணப்ப படிவங்கள் இருக்கின்றன. அதனை பூர்த்தி செய்து அதில் கேட்கும் ஆவணங்களின் நகல்கள் எடுத்து சென்று சப்மிட் செய்தால் அலுவலர்கள் உங்கள் இடத்தினை பார்வையிட்ட பின்னர் கொட்டைகை அமைத்து தருவார்கள். இதில் உங்களுடைய எத்தனை ஆடுகள் மாடுகள் இருக்கிறதோ அதற்கேற்ப அவர்கள் பணம் ஒதுக்கி கொட்டகை அமைத்து கொடுப்பார்கள். உதாரணமாக இரண்டு மாடுகள் இருக்கிறது என்றால் 79, 000 ரூபாயும் பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கிறது என்றால் ரூபாய் 2, 15, 000 கொட்டகையும் தருவார்கள்.
கேழ்வரகு விலை இன்று 2023
விவசாய மின் இணைப்பு 2023
Tn.Gov.In
அப்டேட் மே 16, 2022
தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால் ஆடு வளர்ப்பு செய்பவர்களுக்கு அரசாங்கமே கொட்டகை அமைத்து தருகிறது. அதாவது முதலில் நீங்கள் ஆட்டிற்கான கொட்டகை அமைக்க வேண்டும். அதற்கு பிறகு நூறு சதவீத மானியத்தினை அரசாங்கம் தர உள்ளது. நீங்கள் கொட்டைகைக்காக செய்த செலவு அனைத்தும் மானியமாக உங்களுக்கு வந்து சேரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாடு கொட்டகை மானியம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.