20 ரூபாய் பத்திரம் மதிப்பு

20 ரூபாய் பத்திரம் மதிப்பு - இருபது ரூபாய் வெற்று பத்திரம் என்பது பற்றி பார்ப்போம். சமுதாயத்தில் பணத்தின் தேவை தற்போது அதிகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் அனைவரும் கடன் வாங்கும் சூழல் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைக்கும் 20 ரூபாய் பத்திரத்திற்கும் என்ன தொடர்பு என்று நினைக்க கூடும். பொதுவாகவே கடன் வாங்குவதற்கு கடன் கொடுப்பவர்கள் கடன் பத்திரத்தில் கடன் வாங்குபவரிடம் வாங்குவது வழக்கம்.

20 ரூபாய் பத்திரம் மதிப்பு


பத்திரத்தில் நிறைய வகைகள் இருந்தாலும் 20 ரூபாய் பத்திரம் கடன் கொடுப்பவர்கள் அதிகம் வாங்குவது வழக்கமாகி விட்டது. மற்ற சாதாரண ஐந்து ரூபாய் பத்திரம் எனப்படும் பாண்டும் அதிகமாக வாங்குகிறார்கள். கடன் தருவர்களின் பெயர் அவரின் தந்தை பெயர் மற்றும் ஊரின் பெயர் மட்டுமே காணப்படும். மற்ற எந்த வித குறிப்புகளும் தொகைகளும் குறிப்பிடமாட்டார்கள். இதில் சில மக்களுக்கு இந்த பத்திரத்தின் மூலம் ஏற்படும் சந்தேகங்களை கீழே கேள்வி மற்றும் பதில்களாக கொடுத்து இருக்கிறோம்.

இந்த பத்திரத்தில் வெறுமனே கையெழுத்து போடலாமா?

இந்த பத்திரம் மட்டுமே அல்ல. எந்த வித பத்திரத்திலும் வெறுமனே ஏதும் பூர்த்தி செய்யாமல் கையொப்பம் இடக்கூடாது.

இந்த இருபது ரூபாய் பத்திரம் எந்த தொகை வரையும் கடன் கொடுப்பவர்கள் எழுதலாம்?

எவ்வளவு தொகை வேண்டுமானலும் கொடுக்கலாம். ஆனால் அதற்கும் சரியான வருமான வரி மற்றும் ஆவணங்களை காட்ட நேரிடும். தற்போது வரையும் ரூபாய் 10, 000 வரையிலான கடன் தொகைகள் எழுதி கொள்ளலாம். ஆனால் ஆவணங்கள் இருந்தால் நல்லது.

நான் பணம் முழுவதும் கொடுத்துவிட்டேன். ஆனால் பத்திரம் தர மறுக்கிறார்கள்?

எப்படியோ கேட்டு வாங்கி கொண்டால் நல்லது. இல்லையென்றால் அதில் வேறு ஒரு தொகையை பொய்யாக எழுதி அவர்கள் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. நீங்கள் நல்ல வழக்கறிஞர் இடம் சென்று அவர்கள் மேல் வழக்கு போடலாம்.

நான் முழு பணமும் தர தயாராக இருக்கிறேன். எப்படி பாதுகாப்போடு நான் பணத்தை அவர்களிடத்தில் கொடுப்பது?

முடிந்த வரையில் பணத்தை அவர்கள் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள். அப்படி முடியவில்லை என்றால் ஒரு சாட்சியுடன் செல்லவும்.

கணினி சிட்டா பெறுவது எப்படி 

சிட்டா அடங்கல் படிவம் 

அ பதிவேடு