1 யூனிட் மின்சாரம் விலை - மின்சாரம் என்பது இன்றைக்கு அத்தியாவிசயமான ஒன்றாக நம்மில் கலந்துவிட்டது. மின்சாரம் இல்லை என்றால் இன்றைய பொழுது போகாது என்றே நாம் சொல்ல முடியும். அந்த வகையில் மிகவும் முக்கியமானதாக இது திகழ்கிறது. 2022 ஆம் ஆண்டில் புதிய மின்சார கட்டணத்தினை மின்சார துறை வெளியிட்டது. அதன்படி தான் நாம் மின் கட்டணங்களை செலுத்துகின்றோம்.
முதல் 100 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்தம் இரண்டு வழியாக பிரித்து கொள்கிறார்கள். ஒன்று 0 முதல் 500 யூனிட் என்றும் மற்றொன்று 500 முதல் அதற்கு மேல் உபயோகப்படுத்தும் யூனிட்கள் என்றும் தனித்தனியாக இருக்கிறது.
இதையும் படியுங்க: தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான கேள்வி பதில்
ஒரு யூனிட் மின்சார விலை
ஒரு யூனிட் விலை ரூபாய் 4.50 காசு ஆகும். இது ( 0 - 100 ), ( 101 - 200 ), ( 201 - 400 ) யூனிட்கள் உபயோகப்படுத்தும் வீட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும் 101 முதல் 200 யூனிட் வரையும் உபயோகப்படுத்தும் பயனாளர்களுக்கு அரசு மானியம் உண்டு. அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 2.25 அரசு மானியமாக கொடுக்கிறது.
குறிப்பு
400 முதல் 1000 வரையிலான மின்சாரம் பயன்படுத்துவோர்களுக்கு ஒரு யூனிட் விலை சற்று அதிகமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: மின்சாரம் புகார் மாதிரி கடிதம்