தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான கேள்வி பதில்

தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான கேள்வி பதில் - மின்சார வாரியம் என்பது அரசால் பராமரிக்கக்கூடிய மற்றும் மின்சாரம் வழங்குதல் போன்ற விஷயங்களை செய்வது ஆகும். வணிக கடைகள், வீடுகள், விவசாய நிலங்களுக்கென என பல்வேறு வகையான விஷயங்களுக்கும் மின்சாரம் வழங்குகிறது மின்சாரத்துறை ஆணையம். பயனாளர்களுக்கு மின்சாரம் பற்றிய கேள்விகள் நிறைய நிறைய இருக்கும். அவற்றின் தொகுப்புகள் கீழே இணைப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான கேள்வி பதில்


1. நான் மின்சாரம் சம்பந்தமான விஷயங்களை புகாராக தெரிவிக்கலாமா ? அதற்கு கட்டணம் ஏதேனும் உண்டா ?

கண்டிப்பாக தெரிவிக்கலாம். இதற்கு கட்டணங்கள் ஏதும் கிடையாது.

2. தற்காலிகமாக மின்சாரம் வாங்க முடியுமா ?

நிச்சயம் முடியும். உங்கள் ஏரியாவில் பிரிவு அலுவலர் சந்தித்து கேட்கலாம்.

3. கரண்ட் பில் நான் முன்னதாகவே கட்டலாமா. அதற்கு ரசீது ஏதெனும் உண்டா ?

கட்டலாம். அடுத்து வரும் மாதங்களில் நீங்கள் கட்டிய முன் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.

4. மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு என்ன வழி ?

இந்த கேள்விகள் அனைத்தும் புகார்களாக கொடுக்கலாம். எந்த ஒரு சந்தேகங்கள் இருக்குமாயின் 94987 94987 என்னும் எண்ணிற்கு காண்டாக்ட்செய்யலாம்.

5. மின்தடையானது மாதத்திற்கு எத்தனை முறை செய்வார்கள். எந்த கிழமை மற்றும் எந்த நேரத்தில் மின்தடை ஏற்படும்  ?

மின்தடை மாதத்திற்கு ஒருமுறை செய்வார்கள். பிரதி மாதம் சனிக்கிழமை தோறும் செய்வார்கள். மின்சாரம் ஒழுங்குமுறையை பராமரிக்க ஒரு சில நேரத்தில் இரண்டு நாட்கள் கூட ஆகும். இதன் நேரம் காலை 09 மணி முதல் 10 மணி வரையும் ஆகும்.

6. நான் புதியதாக வீடு ஒன்றை கட்டி உள்ளேன். வயரிங் வேலை எல்லாம் முடிந்துவிட்டது. எனது வீட்டிற்கு புதிதாக மின் இணைப்பு பெற முடியுமா. அப்படி முடியுமே ஆனால் எவ்வளவு கட்டணம் நான் செலுத்த நேரிடும்.

புதிதாக வீட்டின் மின் இணைப்பு பெறுவதற்கு ஆன்லைனில் அப்ளை செய்யும் வசதி தற்போது உள்ளது. முறையான ஆவணங்கள் உதாரணமாக விற்பனை பத்திரம், தான செட்டில்மென்ட், பட்டா, தாசில்தார் லெட்டர், தண்ணீர் வரி எதுவாக இருந்தாலும் எடுத்து கொள்வார்கள். இதற்கு கட்டணம் 2818 மட்டுமே ஆகும்.

மின்சாரம் புகார் மாதிரி கடிதம்