விவசாய டிராக்டர் மானியம் 2022

விவசாய டிராக்டர் மானியம் 2022

விவசாய டிராக்டர் மானியம் 2022 - சிறு குறு விவசாயிகள் மற்றும் பெரு விவசாயிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தினை நாம் பி எம் கிசான் டிராக்டர் யோஜனா என்றும் அழைக்கலாம். ஆனால் புதிதாக மற்றும் முதலாவதாக வாங்கும் ட்ராக்டர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை . விவசாயிகள் ஏற்கனவே டிராக்டர் வைத்து இருந்தாலோ அவர்களுக்கு இந்த வகை மானியம் இல்லை.

விவசாய டிராக்டர் மானியம் 2022


இதனால் விவசாயி 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும் மானியம் பெற வாய்ப்புள்ளது. மொத்தமாக இரண்டு வழிகளில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் வழியாக விண்ணப்பிக்க நேர்ந்தால் உங்களிடம் CSC ID வேண்டும். அப்படி இல்லையென்றால் CSC மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் வெப் போர்டல் ஒரு சில நேரத்தில் ஓபன் ஆகுவதில்லை. அதற்காக தான் நாம் CSC மையம் மற்றும் டிராக்டர் வாங்கும் இடத்தில் அப்ளை செய்கிறோம். ஒருவேளை நீங்களே ஆன்லைனில் பார்க்க விரும்பினால் Agri Machinery இணையதளத்திற்கு சென்று லாகின் செய்தால் உங்களுக்கு மத்திய அரசு subsidy வழங்கி இருக்கிறதா அல்லது இல்லையா என்று காட்டிவிடும். இந்த subsidy அமௌன்ட் சீனியரிட்டி முறையில் உங்களுக்கு வரும். 


இதற்கு தேவையான ஆவணங்களாக ஆதார் கார்டு, ஆன்லைன் சிட்டா, சிறு மற்றும் பெரு விவசாயி சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்கள். இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும் தான் நீங்கள் official போர்டல் ஓபன் செய்ய முடியும். இந்த ஆவணங்கள் இல்லாமல் ரெஜிஸ்டர் செய்ய முடியாது. பிறகு ரெஜிஸ்டர் செய்து விட்டு லாகின் செய்து கொள்ளலாம். டிராக்டர் மானியம் மட்டுமல்ல இதர வேளாண்மை துறை சார்ந்த அனைத்து மானியங்களும் இந்த இணையத்தளம் மூலமாக பெறலாம்.

கிசான் கார்டு வாங்குவது எப்படி