-->
விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா

விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா

விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா - இந்த சந்தேகங்கள் எப்போதும் அனைவருக்குமே எழுந்து கொண்டே இருக்கும். ஏனெனில் காலியாகவோ அல்லது விவசாயத்திற்கு உபயோகித்து கொண்டு இருக்கின்ற நிலங்களில் தற்போது வீடுகளை கட்ட முடியுமா என்கிற கேள்விகள் நம் மனதில் எழ வாய்ப்புண்டு. விவசாய நிலம் என்றால் அக்ரி லேண்ட் என்பார்கள். இது ஒரு வகையான நிலத்தின் வகைப்பாடு ஆகும். இது பொதுவாகவே அரசு பெரும்பாலும் அனுமதிப்பதில்லை என்கிற கூற்று தற்போதும் உள்ளது. ஏனெனில் வேளாண் சார்ந்த நிலங்கள் குறைந்து வருவதனால் விளைச்சலும் குறைந்து வருகிறது.

விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா


ஏற்கனவே விவசாயம் செய்கின்ற நிலங்களில் மாட்டு தொழுவம் மற்றும் மற்ற பொருட்களை வைப்பதற்கு சிறிதளவு கட்டிடங்கள் வேண்டுமானால் கட்டிக்கொள்ளலாம். ஆனால் வீடுகளை கட்டி கொள்ள முடியாது. காலியாக உள்ள விவசாய நிலங்களில் வீடுகளை கட்டி கொள்ள முடியும். ஆனால் அதற்கு சில பல விதிமுறைகளை பின்பற்றிய ஆக வேண்டும்.

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி

விதிமுறைகள்

1. 15 அல்லது 20 வருடங்கள் அந்த நிலங்கள் தரிசாக இருக்க வேண்டும்.

2. வி ஏ ஓ அவர்கள் அடங்கல் மூலம் உங்கள் நிலம் தற்போது தரிசு நிலம் என்பதனை கலெக்டருக்கு அனுப்புவார். அதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசோதித்து தடையில்லா சான்றிதழும் கொடுக்க வேண்டும்.

3. பிறகு டி டி சி பி அல்லது சி எம் டி ஏ அப்ரூவல் வேண்டும்.

10 சென்ட் நிலம் அரசு கிரயம் செய்ய முடியுமா

நிச்சயம் விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்ற அரசு கிரயம் செய்ய முடியும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவர் வாங்கும் பட்சத்தில் கிரயம் செய்வர்.

வசதி உரிமைச் சட்டம் 1882