வசதி உரிமைச் சட்டம் 1882

வசதி உரிமைச் சட்டம் 1882 - வசதியுரிமை சட்டம் இந்த சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமே. தற்போது இல்லாவிட்டாலும் பின்னாட்களில் இந்த வசதி உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமே. ஒரு பொது பாதை, நடைபாதை இவைகளை அடைத்து உரிமை கொள்வது அல்லது அந்த பாதையை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது என்று அடைத்து கொள்வது வசதியுரிமை ஆகும்.

வசதி உரிமைச் சட்டம் 1882


எடுத்துக்காட்டு

1. ஒரு பொது பாதை இருக்கிறது. அந்த பாதையை தாண்டி தான் மற்ற இடங்களுக்கு செல்வது அல்லது மற்ற பகுதிகளுக்கு செல்வது அல்லது தண்ணீர் எடுக்கும் சூழல் உள்ளதெனில் அந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் அடைத்து கொள்கின்றார். இப்போது என்ன செய்வது?

மக்கள் அந்த வழியை தாண்டி தான் போக வேண்டும் என்றால் கட்டாயம் அவர் வழி விட்டு தான் ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் மாற்றுப்பாதை உண்டெனில் மற்றவர்கள் அந்த வழியை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வேறு பாதையும் இல்லையென்றால் இந்த வழியை விட்டு தான் ஆக வேண்டும். அதாவது பட்டா நிலம் என்றாலும் வழி விட்டு தான் போக வேண்டும்.

அப்படியும் வழி விட மறுக்கிறார் என்றால் வசதி உரிமை சட்டம் 1882 யை பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்குரிமை கேட்டு அவரின் மேல் வழக்கு தொடுக்கலாம். இது கண்டிப்பாக வழக்கு போட்டவருக்கு தான் சாதகமாக வரும்.

நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம்