விடுதலை பத்திரம் ரத்து செய்ய முடியுமா

விடுதலை பத்திரம் ரத்து செய்ய முடியுமா மற்றும் விடுதலை பத்திரம் பதிவு கட்டணம் ( Viduthalai pathiram tamil ) - விடுதலை பத்திரம் என்பது ஒருவருடைய சொத்தில் இனி தனக்கு இல்லை என்று எழுத்துபூர்வமாக எழுதி கொடுப்பது ஆகும். தான பத்திரமும் இந்த விடுதலை பத்திரமும் ஓரளவு ஒன்று தான். அது எப்படி என்றால் இரண்டிற்குமே முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் மட்டுமே பத்திர பதிவு துறை நிர்ணயம் செய்கிறது. ஆனால் தான பத்திரம் சொத்தின் உரிமையாளர் பாசத்தால் மட்டுமே ஒரு கிப்ட் ஆக கொடுப்பது. இந்த விடுதலைப்பத்திரம் அப்படி இல்லாமல் சொத்தினை பெறுபவர் விட்டு கொடுப்பது ஆகும். ஆனால் அதனை ஒரு பொருளாகவோ அல்லது பணமாகவோ தான் இப்போது உள்ள மக்கள் விட்டுக்கொடுக்கின்றனர்.

விடுதலை பத்திரம் ரத்து செய்ய முடியுமா


எதற்காக இந்த விடுதலை பத்திரத்தினை எழுதி வாங்குகிறார்கள் என்றால் சொத்தில் எந்த வித பிரச்சனைகள் அல்லது கூட்டு பட்டாவாக பரம்பரை சொத்து அல்லது கூட்டு பட்டாவாக நிலம் அல்லது மனை வாங்கியவர்கள் தனியாக சொத்தினை பெறுவதற்கும் மற்றும் சேர்ப்பதற்கும் இந்த விடுதலை பத்திரங்கள் உபயோகமாகிறது.

பட்டா சிட்டா

இது மாதிரியான பத்திரங்கள் எழுதி வாங்கி விட்டால் பிற்காலத்தில் எந்த வித பிரச்சனையும் வரப்போவதில்லை. ஏனென்றால் இந்த பத்திரத்தினை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. பதிவு துறையில் பதிவு செய்த பின்னர் என்ன செய்தாலும் ரத்து செய்யும் முறை எழுதி கொடுத்தவருக்கு கண்டிப்பாக முடியாது. மேலும் அதன் மேல் வழக்கு தொடுத்தாலும் சொத்தின் உரிமையாளரிடமே தான் அந்த சொத்துக்கள் போகும்.

பதிவு செய்யாமல் இருக்கும் பத்திரங்களை எளிதாக ரத்து செய்ய முடியும். அதனால் நீங்கள் விடுதலை பத்திரம் ஒன்றில் கையெழுத்து இடுவதாக இருந்தால் முழுவதும் படித்துவிட்டு பின்பு கையெழுத்து அல்லது கை ரேகை இடவும்.