வீட்டு வரி விவரங்கள்

வீட்டு வரி விவரங்கள் விவரம் - நாம் வசிக்கின்ற வீட்டில் அவ்வப்போது வரிகளை கட்டுவது வழக்கம். அது நமது நலனிருக்கும் மற்றும் பொது நலனிருக்கும் பொருந்தும். நமது நலம் என்றால் வீட்டு வரி கட்டுவது மூலம் ஒரு உரிமையுள்ள ஆவணமாக கருதப்படும். ஏதாவது சொத்து உரிமையாளர் பிரச்சனை ஏற்பட்டால் அதிலிருந்து காத்து கொள்ள அல்லது ஒரு உரிமையாளர் என்பதனை இந்த வீட்டு வரி மூலம் நாம் பார்த்து கொள்ள முடியும்.

வீட்டு வரி விவரங்கள்


பொது நலன் என்றால் ஒவ்வொரு மக்களும் கட்டுகின்ற வரி பணத்தின் மூலம் அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஏதாவது ஒரு நலன்களை பூர்த்தி செய்யலாம். உதாரணமாக தாராளமான சாலை, குடிநீர் குழாய், தெருவிளக்கு அல்லது நூலகம் என பல்வேறு நலத்திட்டங்களை இதன் மூலம் நிறைவேற்றலாம்.

இதையும் படிக்க: வீட்டு வரி ரசீது எண்

வீட்டு வரியில் இரண்டு விவரங்கள் என்று போட்டு இருப்பார்கள். அது என்னவென்றால் இது என்ன வரி மற்றும் அதன் தொகை எவ்வளவு என்று போட்டு இருப்பார்கள். பொதுவாகவே அனைத்து வீட்டு வரிகளிலும் வீடு வரி மற்றும் நூலக வரி என போடப்படுவதுண்டு.

இதையும் படிக்க: வீட்டு வரி செலுத்துவது எப்படி