வருவாய் கோட்டாட்சியர் பணிகள்

வருவாய் கோட்டாட்சியர் பணிகள், அதிகாரங்கள், விசாரணை - வருவாய் கோட்டாட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா இரண்டு அல்லது மூன்று நபர்களை நியமிப்பார்கள். பெரிய மாநகரம் அதாவது சென்னை போன்ற நகரங்களில் மூன்று வருவாய் கோட்டாட்சியர்களை அரசாங்கம் நிச்சயமாக நியமிப்பார்கள். ஏனெனில் மக்கள்தொகை மற்றும் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளமையால் அதனை சமாளிக்க கோட்டாட்சியரை அமல்படுத்துவார்கள்.

வருவாய் கோட்டாட்சியர் பணிகள்


கோட்டாட்சியர் என்றால் என்ன மற்றும் அவரின் அதிகாரங்கள்

உதாரணமாக, நமக்கு பட்டாகள் கொடுப்பது தாசில்தாராக இருந்தாலும் அதனை ரத்து  உரிமை ஆர் டி ஓ விற்கு மட்டுமே உள்ளது. பட்டாக்களின் மோசடிகள், தவறாக பதியப்பட்டவை என இருந்தாலும் இவர் அதனை எளிமையாக ரத்து செய்யலாம். இதற்கு சம்மந்தப்பட்ட நபர்கள் ஆர் டி ஓ கோர்ட் இடம் சென்று உங்கள் மனுக்களை கொடுக்கலாம். ஆர் டி ஓ கோர்ட் என்றால் வருவாய் கோட்டாட்சியர் நடத்தும் நீதிமன்றங்கள் தான்.

கிராம நிர்வாக அலுவலர் பணிகள் மற்றும் கடமைகள் Pdf

விசாரணை மற்றும் மனு

இங்கே உங்கள் மனுக்கள் எதுவாக இருந்தாலும் கொடுக்கலாம். இவரும் முதல்நிலை அமர்வு நீதிபதி தான். எப்படி நீதிமன்றங்கள் செயல்படுகிறதோ அதேபோல் இங்கேயும் இரண்டு தரப்பினருக்கும் அழைப்பாணை விடுத்து முறையான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் சரியாக இருப்பின் அவற்றினை விசாரணை செய்து உத்தரவு பிறப்பிப்பார். மக்களாகிய நாம் கொடுக்கும் மனுக்களை இவர் ஏற்காவிட்டால் இவருக்கு மேல் உள்ள டி ஆர் ஓ அதாவது மாவட்ட வருவாய் அலுவலரிடம் சென்றும் புகார்களை தரலாம்.

மண்டல துணை வட்டாட்சியர் பணிகள்

குறிப்பு

ஆர் டி ஓ விற்கு நீங்கள் எவ்வித மனுக்கள் மற்றும் புகார்களை கொடுக்க முடியும். வருவாய் சம்மந்தப்பட்ட துறையிலும் சரி அல்லது மோசடி பத்திர பதிவுகள் இருந்தாலும் இவரிடம் சென்று முறையிடலாம்.