மண்டல துணை வட்டாட்சியர் பணிகள்

மண்டல துணை வட்டாட்சியர் பணிகள் - மக்களுக்கு ஒரு அலுவலகம் எந்தத்த துறையின் கீழ் வருகிறது, எந்தெந்த திட்டங்கள் மற்றும் எந்தெந்த நோக்கங்களுக்கு செயல்படுகிறது என்பது தெரிவதில்லை. முதலில் வட்டாட்சியர், தாசில்தார் இந்த பெயர்கள் எல்லாம் ஒன்று தான். இதில் துணை வட்டாட்சியர் என்பவர் வருவாய் குறு வட்டங்களை பார்த்து கொள்வார். அதாவது வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது தான் குறு வட்டங்கள் ஆகும். அந்த குறு வட்டங்களை பார்த்து கொள்பவர் தான் இந்த துணை வட்டாச்சியர் ஆவார். இவருக்கு மண்டல துணை வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் என்றும் அழைக்கலாம்.

மண்டல துணை வட்டாட்சியர் பணிகள்


இவர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பணிகளை மேற்கொள்வார். தேர்வாணையம் மற்றும் வேலை உயர்வு அடிப்படையில் இவர் நியமிக்கப்படுவார். இது மட்டுமில்லாமல் சட்டம் ஒழுங்குமுறை, பட்டா பாஸ் புத்தகம் தணிக்கை செய்தல், வருவாய் வசூல் ஆய்வு, கிராம கணக்குகள் ஆய்வு, முதியோர்உதவித்தொகை , வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் தருதல், அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கை செய்தல் என இவர் செய்யும் பணிகளை அடிக்கி கொண்டே போகலாம்.

தமிழ்நாடு வருவாய் கோட்டங்கள் எண்ணிக்கை 2022

இதில் மக்கள் பெரும்பாலும் கிராம நிர்வாக அலுவலரிடமே சென்று இத்தகைய விஷயங்களுக்காக செல்கிறார்கள். ஏனெனில் ஒரு சில மக்களுக்கு தெரியாத காரணத்தால் அவர்கள் அங்கு சென்று கொண்டு இருக்கின்றனர். இதை மேற்கண்ட திட்டங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் நேரடியாக சென்று மனு கொடுக்கலாம்.

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள்