தமிழ்நாடு வருவாய் கோட்டங்கள் எண்ணிக்கை 2024

தமிழ்நாடு வருவாய் கோட்டங்கள் எண்ணிக்கை 2024 - வருவாய் கோட்டாட்சியரை நாம் சப் கலெக்டர் அல்லது துணை ஆட்சியர் என்றும் அழைக்கலாம். இவருக்கு வருவாய்த்துறை அலுவலகர் அதாவது ரெவினு டிவிஷன் ஆபீசர் ( RDO ) என்கிற மற்றொரு பெயரும் உண்டு. ஒவ்வொரு மாவட்டங்களிலும் வருவாய் கோட்டங்கள் அலுவலகம் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. ஒரு மாவட்டத்தில் குறைந்தது இரண்டு முதல் மூன்று வருவாய் கோட்டங்கள் காணப்படும். ஏனெனில் அந்த மாவட்டத்தில் வட்டங்கள், கிராமங்கள், குறு வட்டங்கள் என அதிகமாக இருப்பதால் இரண்டு அல்லது மூன்றாக பிரிக்கின்றனர்.

தமிழ்நாடு வருவாய் கோட்டங்கள் எண்ணிக்கை 2024


ஐந்து, ஆறு அல்லது ஏழு குக்கிராமங்களை இணைத்து வருவாய் கிராமமாக மாற்றுகின்றனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலகர் கட்டுப்பாட்டில் நடத்துவார். அந்த வருவாய் கிராமத்தினை குறு வட்டங்களாக இணைத்து கொள்வர். அதனை மண்டல துணை வட்டாச்சியர் அவர்கள் பார்த்துக்கொள்வார். இந்த குறு வட்டத்தினை வருவாய் வட்டங்களாக மாற்றி கொள்கின்றனர். இதனை தாசில்தார் அவர்கள் செயல்படுத்துவார். இறுதியாக வருவாய் வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டங்களாக பிரித்து கொள்கின்றனர். இதனை தான் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் செயல்படுத்துகிறார்.

தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது

இவருடைய பணிகள் என்று பார்த்தால் வருவாய் துறையில் பட்டா, சிட்டா, பெயர் மாற்றங்கள் குளறுபடி போன்ற விஷயங்களை தவறு என கருத்தப்பட்டால் அதனை ரத்து செய்யும் முழு உரிமையும் இந்த RDO க்கு உள்ளது. அது என்னதான் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலகர் ஒப்புதல் செய்திருந்தாலும் அதனை ரத்து செய்யும் முடிவு இறுதியாக RDO விற்கு உள்ளது.

தமிழ்நாடு வருவாய் மாவட்டங்கள் 2024 எண்ணிக்கை

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இதுவரையும் 90 வருவாய் கோட்டங்கள் உள்ளது. இந்த எண்ணிக்கை மாவட்டங்களில் உள்ள வருவாய் கிராமத்தினை பொறுத்ததே ஆகும். இதேபோல் தமிழ்நாடு வருவாய் கிராமங்கள் எண்ணிக்கை 2022 என்னவென்றால் 15, 871 ஆகும்.

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள் 2024