வருமான சான்றிதழ் status download pdf

வருமான சான்றிதழ் status download pdf - வருமான சான்று அனைவருக்குமே தேவை என்பதால் அதனை எளிமையாக எடுக்கக்கூடிய வசதியை வருவாய் துறையானது ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஏனெனில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து அதற்குண்டான ஆவணங்களை இணைத்து நாள்கணக்காக வெயிட் செய்ய வேண்டும். மேலும் அதன் நிலையினை அறிய நேரடியாக அலுவலகம் சென்றே ஆக வேண்டும்.

வருமான சான்றிதழ் status download pdf


தற்போது அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை உங்கள் விண்ணப்பம் காரணமின்றி அல்லது ஏதாவது காரணத்துடன் நிராகரிக்கப்பட்டால் அலுவலகம் சென்று கேட்கவும். மற்றபடி அலுவலகம் செல்ல தேவையில்லை.

இதையும் பார்க்க: வருமான சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்

மாணவர்களாக இருந்தால் அவர்களின் பெற்றோர் வருமான சான்று போதுமானது. பெற்றோரின் பெற்றோர்களின் வருமானத்தை கூட்ட கூடாது. இதே அந்த மாணவர் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்திருந்தால் அவரின் வருமானம் அவரின் சம்பள அடிப்படையில் மாறும்.

எந்த வருவாய்த்துறை ஆவணங்களாக இருந்தாலும் சரி அவர்கள் tnesevai வெப்சைட் இல் கேன் எண் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். அப்போது தான் அதன் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள முடியும். அப்ளை செய்தவுடன் ஒப்புகை சீட்டு எண் ஒண்றினை தருவார்கள். அதனை வைத்து தான் நாம் நிலையினை அறிந்து கொள்ள முடியும்.

இதையும் பார்க்க: கிராம நிர்வாக அலுவலர் சான்று pdf