வருமான சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள் - வருமானம் என்பது தான் அல்லது அவர்களின் குடும்பத்தார் சம்பாதிக்கக்கூடிய வருவாய்களில் இருந்து வரக்கூடிய பணம் வருமானமாகும். இதனை பல்வேறு விதமாக பிரிக்கலாம். அதிலும் வருமான வரி கட்டக்கூடிய நபர்கள் இருந்தால் அந்த ரசீதினையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கையில் பொது மக்களிடம் விசாரணை செய்ய வேண்டும். அதாவது முகவரி, சம்பள ரசீது, வருமான வரி ரசீது, வாடகையில் இருந்து வரக்கூடிய பணம் மற்றும் பல வழிகளில் இருந்து வரக்கூடிய பணம் முதலியவை சரிபார்க்கப்பட்டு வி ஏ ஓ அவர்கள் வருவாய் ஆய்வாளர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனை பரிசீலினை செய்த பின்னர் மண்டல துணை வட்டாட்சியருக்கு அனுப்புவார். மொத்தமாக இதற்கு எடுத்து கொள்ளக்கூடிய கால அவகாசம் 15 நாட்கள் மட்டுமே.
1. புகைப்படம்
2. முகவரி சான்று
3. TIN எண்
4. அடையாள சான்று
5. சம்பள ரசீது.
இதையும் பார்க்க: திருமண சான்றிதழ் பதிவிறக்கம்