வாகனம் வாங்க ஏற்ற நாள் 2025 ஏற்ற நட்சத்திரம் ஏற்ற ஓரை ( உகந்த மாதம் அல்லது நல்ல நாள் ) ( vahanam vanga nalla naal 2025 ) - நாம் எந்த பொருளாக இருந்தாலும் சரி அது நல்ல நாளாக பார்த்து வாங்க வேண்டும் என்று நமது வீட்டு பெரியோர்கள் மற்றும் முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டதுண்டு. பொதுவாகவே கல்யாணம், காது குத்து மற்றும் இதர சுப காரியங்களுக்கு மட்டுமே நாம் உகந்த நாள் பார்ப்பதுண்டு. ஆனால் எந்த பொருளாக நாம் வாங்கினாலும் சரி கொடுத்தாலும் சரி அதற்கு நாள் பார்ப்பது அவசியமே. அந்த வகையில் பின்வரும் பத்தியில் எந்த நாளில் வாகனங்கள் வாங்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரு இடத்திற்கு ஒரு இடம் செல்ல அதிகளவில் வண்டி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றோம். அது சிறிய வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையும் ஆகும். ஒரு இடத்திற்கு வேகமாகவும் அதே சமயத்தில் சரியாகவும் செல்ல இது பயன்படுகிறது. மேலும் மருத்துமனை, பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோவில் மற்றும் இதர பயன்பாட்டிற்கு நாம் பெரிதளவில் உபயோகப்படுத்துகின்றோம்.
இதையும் காணலாமே: சுக்கிர ஹோரையில் என்ன செய்யலாம்
ராசிக்கு ஏற்ற வாகன நிறம்
1. மேஷம் - வெள்ளை
2. ரிஷபம் - சிவப்பு, ஆரஞ்சு, சில்வர்
3. மிதுனம் - மஞ்சள், சந்தனம்
4. கடக - லைட் ரோஸ், பிங்க்
5. சிம்மம் - சிவப்பு, மெரூன்
6. கன்னி - லைட் மஞ்சள், சந்தனம்
7. துலாம் - கருப்பு, நீலம்
8. விருச்சிகம் - நீலம், சிவப்பு
9. தனுசு - சில்வர்
10. மகரம் - சிகப்பு, மெரூன்
11. கும்பம் - பாதி வெள்ளை, பிங்க்
12. மீனம் - லைட் பச்சை, சிமெண்ட் கலர்.
குறிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கலர்கள் ராசி மற்றும் லக்கினத்திற்கு உரிய நிறங்கள் ஆகும். இது பொதுவான பலன்களே ஆகும். உங்கள் சரியான ஜாதகத்தின் அடிப்படையில் மட்டுமே உங்களுண்டான நிறங்களை கண்டுபிடிக்க இயலும்.
வாகனம் வாங்க ஏற்ற கிழமை மற்றும் ஏற்ற ஓரை
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கலாம். அதிலும் வெள்ளிக்கிழமை நாட்களில் வாங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த இரண்டு தினங்களிலும் செவ்வாய், சுக்கிரன் மற்றும் குரு ஓரைகளில் வருகின்ற நேரங்களில் வாங்கலாம்.
இதையும் படிக்கலாமே: காதணி விழா செய்ய உகந்த நாள்