உயில் ரத்து செய்வது எப்படி

உயில் ரத்து செய்வது எப்படி - உயிலானது தனக்கு பிறகு இவர்களுக்கு தான் சம்பாதித்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் ஆவணம் உயில் ஆகும். அப்படி எழுதும் சில உயில்களில் பிரச்சனை இல்லாமல் ரத்து செய்வது எப்படி என்று பார்ப்போம்.

உயில் ரத்து செய்வது எப்படி


கேள்வி 1- உயிலை யார் ரத்து செய்வது ? 

உயிலை எழுதும் நபர் அதாவது சொத்தின் சொந்தக்காரர் தான் ரத்து செய்ய வேண்டும்.

கேள்வி 2 - உயிலை எப்படி பாதுகாப்பது ? 

சொத்தின் உரிமையாளர் உயிலை பாதுகாக்க பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று பதிய செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால் உரிமையாளர் இல்லை என்றாலும் அந்த சொத்தானது யாருக்கு போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு போய் சேரும் எந்த வித பிரச்சனை இல்லாமல்.

கேள்வி 3 - உயில் பதிவு செய்வது கட்டாயமா ? 

உயில் ஆனது பதிவு செய்ய கட்டாயமில்லை. அதற்காக ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் பதிவு செய்தால் பிற்காலத்தில் பிரச்சனை வந்து சேரும் என்பதே உண்மை. மேலும் சாட்சிகளும் கட்டாயமில்லை. ஆனால் சாட்சிகள் இருந்தால் மிகவும் நல்லது.

கேள்வி 4 - உயில் எழுதி பிறகு தான செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு சொத்தின் உரிமையாளர் மாற்றலாமா ? 

உயில் எழுதும் நபர் கண்டிப்பாக உயிலை மொத்தமாக ரத்து செய்து பிறகு வேறு ஏதாவது ஒரு விஷயங்களை செய்யலாம். உதாரணமாக ஒருவருக்கு தான செட்டில்மெண்ட், விற்பனை செய்யலாம்.

கேள்வி 5 - உயில் எழுதும் நபர் வெளியில் உள்ளார் எனில் அவர் உயில் எழுதலாமா அல்லது செல்லுமா ? 

உயில் எழுதும் நபர் எங்கு இருந்தாலும் எழுத முடியும். அது சட்டப்படி செல்லும். ஆனால் அவர் நல்ல நிலைமையில் தான் எழுத வேண்டும். மேலும் வெளியில் இருக்கும் நபர் உயிலை கண்டிப்பாக உயிலை பதிவு செய்ய வேண்டும்.

கேள்வி 6 - ஒருவர் ஏற்கனவே உயிலை ரத்து செய்து விட்டார். அவர் மறுபடியும் உயிலை எழுதலாமா ? 

கண்டிப்பாக உயிலை எழுதலாம். ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அவர் கடைசியாக எழுதிய உயில் மட்டும் தான் செல்லும்.

கூட்டு உயில்

உயில் சட்டம் Pdf 

உயில் நீதிமன்ற தீர்ப்பு

Tn.Gov.In