உயில் எழுத ஆகும் செலவு 2023 ( உயில் பதிவு கட்டணம் ) - உயில் என்பதும் ஒருவர் மற்றொருவருக்கு எழுதி கொடுக்கும் ஆவணமே ஆகும். பொதுவாகவே அவர்கள் குடும்பத்திலே ஏற்படும் சொத்துக்கள் ஆகும். இதனை சட்டபூர்வமாக பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் பதிவு ஆக வேண்டும். பதிவு செய்யாமல் சிலர் உயில் எழுதி வைக்காமல் போனால் அதனை மெய்ப்பிக்கவே சில வருடங்கள் ஆகும். அது என்ன உயில் மெய்ப்பித்தல் என்று கேட்டால் கிடைக்கப்பெற்ற உயில் ஆனது அவர் தான் எழுதினாரா அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டு யாராவது எழுதினாரா என்பதனை ஆராயவே சில வருடங்கள் எடுக்கும்.
உதாரணமாக ஒருவர் சொத்துக்களை உயில் எழுத வேண்டும் என்று கூறிவிட்டு எழுதாமல் போனால் அந்த சொத்தானது நேரடியாக வாரிசுகளுக்கு போகும். ஆனால் அந்த சொத்தை அபகரிக்க வேறு யாராவது அவர் போல் கையொப்பம் இட்டு எழுதினால் அது பிரச்சனையே சேரும். ஏனெனில் மற்ற வாரிசுகள் அதனை சந்தேகப்பட்டு வழக்கு தொடுத்தால் அது வருட கணக்கில் கொண்டே போகும்.
புறம்போக்கு நிலம் வகைகள்
இதே அவர் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு சென்றால் பிரச்சனை ஏதும் வரப்போவதில்லை. ஒருவேளை அவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பின் அதில் ஒருவர் பெயரில் மட்டுமே அசையும் அசையா சொத்துக்கள் எழுதினாலும் மற்றவர்கள் கேஸ் தொடர முடியாது. பயனாளர்கள் ஒன்றை நினைவில் வேண்டும் . அது என்னவென்றால் உயில் எழுதும் நபர் சொத்துக்கள் அவருடைய சுயமாக சம்பாதித்தவையாக இருக்க வேண்டும். அவர் சம்பாதிக்காமல் சொத்துக்கள் இருப்பின் உயில் எழுதும் தகுதி அற்றவர் ஆவர்.
நிலம் அளக்கும் முறை
உயில் பதிவு கட்டணம் 2023
உயில் பதிவு செய்ய கட்டணம் என்று பார்த்தால் 1 சதவீதம் மட்டுமே. அதும் சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே. முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் கிடையாது. இதே சொத்து மதிப்புகள் ஏதும் குறிப்பிடப்படாமல் இருந்தால் ரூபாய் 500 மட்டுமே செலுத்தி ரெஜிஸ்டர் செய்யலாம். முத்திரை கட்டணம் கிடையாது. இந்த சலுகை உயில் பத்திரத்திருக்கே உள்ளது. மற்ற பத்திரங்கள் எதுவாயினும் நிச்சயம் முத்திரை தீர்வை கட்டியே ஆக வேண்டும்.