கணினி பட்டா பெறுவது எப்படி - பட்டா என்பது ஒரு நில உரிமையாளரின் அனுபவ மிக்க ஒரு ஆவணமாகும். அது என்ன கணினி அல்லது கம்ப்யூட்டர் பட்டா என்பது போல் நிறைய பேருக்கு சந்தேகங்கள் அதிகமாக வரக்கூடும். தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் பட்டா ஆவணங்களை நில உரிமையாளர் இல்லாமலே ஒரு நிமிடத்திலே எடுக்க கூடிய வசதி உள்ளது. 1988 க்கு பிறகு அனைத்து வகையான பட்டாக்களையும் கணினி மூலம் அப்டேட் செய்து விட்டார்கள். இதனால் மோசடிகள் மற்றும் திருத்தங்களை தடுக்க கணினியின் மூலம் அப்டேட் செய்தார்கள்.
ஆனால் இது 2006 க்கு பிறகு உள்ள ரெகார்டஸ் மட்டுமே நாம் தற்போது உள்ள அரசாங்க இணையத்தளத்தில் பார்க்க முடியும். ஏனெனில் அனைத்தும் அரசாங்க இணையத்தளத்தில் அப்டேட் செய்ய முடியாத காரணத்தினாலும் உரிமையாளர்களின் மொத்த விபரங்கள் மற்றும் இதர நிலங்கள் தொடர்பான விஷயங்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக இதனை அவர்களே எடுத்து வைத்துள்ளார்கள். அதாவது 2006 க்கு முன்னர் உள்ள ரெகார்டஸ் எல்லாம் பதிவேடுகள் மூலம் பாதுகாக்கின்றனர்.
தாத்தா சொத்தில் பேத்திக்கு உண்டா
கம்ப்யூட்டர் பட்டா ஆன்லைன்
நாம் Eservices வெப்சைட் மூலம் எடுக்கும் பட்டாவே கணினி பட்டா என்றழைக்கலாம். இதனால் மக்கள் வருவாய்த்துறை அலுவலகம் வரையும் வர வேண்டிய அவசியம் இல்லாமலும் மக்கள் இதர தேவைகளுக்காக பட்டாவை கணினி மூலம் எடுத்து பயன்படுத்தலாம் என்கிற நல்ல நோக்கத்தோடு இதனை கொண்டு வந்தார்கள். இதில் மாவட்டம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் கிராமங்கள், நில உரிமையாளர் பெயர் அவருடைய தந்தை, நன்செய் அல்லது புன்செய், தீர்வை, புல எண், உட்பிரிவு எண் மற்றும் குறிப்புரைகள் எல்லாம் இருக்கும்.
பழைய பட்டாக்களின் தொகுப்புகள் அந்தந்த வருவாய் கிராமங்களை பராமரிக்கும் கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்வார். கணினியில் வரும் பட்டா ஒரிஜினல் இல்லை ஆனாலும் அதனை நாம் உபயோகிப்படுத்தி கொள்ளலாம்.
1 சதுரம் எத்தனை square feet