துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 2023 திருமண வாழ்க்கை பலன்கள் ( thulam rasi swathi natchathiram 2023 in tamil ) - மொத்தமாக 27 நட்சத்திரங்கள் உள்ளதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். அதில் 15 வதாக இருக்கக்கூடிய சுவாதி நட்சத்திரத்தினை பற்றி தான் நாம் Patta Chitta வில் பார்க்க போகின்றோம். இந்த நட்சத்திரக்காரர்கள் துலாம் ராசியினை கொண்டு இருப்பார்கள். நட்சத்திரத்தில் உள்ள நான்கு பாதங்களும் இந்த துலாம் ராசியில் உள்ளது கூடுதல் சிறப்பு.
ராகு பகவான் இதற்கு அதிபதியாக உள்ளார். ராகு பகவானின் இரண்டாம் நட்சத்திரமாக இந்த சுவாதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் ஏழு வருடங்களுக்கு ராகு திசை இருக்கும். பிறகு 16 வருடங்கள் குரு பகவான் அதாவது உங்களுடைய 23 வயது வரை திசையில் இருப்பார். மேலும் 19 வருடங்களுக்கு சனி பகவான் திசை உங்கள் மீது படும். இறுதியாக புதன் பகவான் 17 வருடங்களுக்கு இருப்பார். வாழ்க்கையில் முக்கால் பாகம் பெரிய நட்சத்திரங்களின் திசைகளிலே இருப்பீர்கள். இப்படி ஒவ்வொரு கிரகங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக இருப்பார்கள்.
இதையும் படிச்சிட்டு போங்க: சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்
குணங்கள்
1. சுறுசுறுப்பு.
2. எந்த தொழிலையும் சமாளிப்பீர்கள்.
3. சட்டம் பேசுபவர்கள்.
4. எந்த இடம் என்றாலும் அதில் இருப்பார்கள்.
5. சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பீர்கள்.
5. இளமை தோற்றம் எப்போதும் இருக்கும்.
திருமண வாழ்க்கை
மொத்தம் நான்கு விதமான பாதங்கள் இருப்பதால் ஒரே மாதிரி திருமண வாழ்க்கை இருக்காது. இதில் முதல் பாத நட்சத்திரத்தை கொண்டுள்ளவர்களுக்கு 34 வயதிற்கு பிறகு கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்கிறது. மற்ற பாதகாரர்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த 2023 ஆண்டில் ஆறு மாதங்களுக்கு நிச்சயம் சிறப்பு பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
சற்று முன்: ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது
சனி மற்றும் குருவின் இடம்
வருடத்தின் தொடக்கத்திலேயே அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட்டு பஞ்சம ஸ்தானத்தில் சனி பகவான் அமர்வார். மேலும் குரு பகவான் அவர்கள் ஏப்ரல் மாதத்திற்கு மேல் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பார். இதனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
சற்று முன்: குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது