குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது வருகிறது

குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது வருகிறது ( guru peyarchi 2023 to 2024 in tamil date ) - கிரகங்களின் பெயர்ச்சிகள் ஏராளம் இருந்தாலும் அதில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதில் குரு பெயர்ச்சியானது வருடத்தில் ஒருமுறை வீதம் என ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும். அதாவது ஒரு ராசியில் குரு மறுபடியும் வரவேண்டுமென்றால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் தற்போது குருவானது மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.

இந்த குரு கிரகம் சுபகாரியங்கள் செய்ய ஏதுவாக இருக்கிறது. அதனால் மற்ற ராசிகளுக்கும் நன்மையும் அதே சமயத்தில் ஒரு சில விஷயத்தில் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகிறது.

குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது


குருவின் பார்வை

குரு பெயர்ச்சி மேஷத்தில் செல்வதால் பத்திரம், வீடு சம்பத்தப்பட்ட வேலைகள் எளிதாக நடைபெறும். ஏனெனில் செவ்வாய் வீடாகும். என்னதான் குருவானவர் மேஷத்தில் சஞ்சாரத்திலும் அவர் பார்வை படும் இடங்களில் கூடுதல் நன்மை பயக்கும். அப்படி அவர் யார் யார் மீது பார்வை படப்போகிறார் என்பதை கீழே காணலாம்.

இதையும் தெரிஞ்சிக்கலாமே: கோவிலில் அன்னதானம் சாப்பிடுவது போல் கனவு

1. ஐந்தாம் பார்வை - சிம்மம்

2. ஏழாம் பார்வை - துலாம்

3. ஒன்பதாம் பார்வை - தனுசு

குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது

திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் அதாவது சித்திரை 09 ஆம் நாள் அதிகாலை 02.47 க்கு மீனத்தில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்து போகின்றார்.

இதையும் தெரிஞ்சிக்கிட்டு போங்க: வியாழக்கிழமை குரு ஓரை நேரம்