தாசில்தார் பணிகள் என்றால் என்ன

தாசில்தார் பணிகள் என்றால் என்ன

தாசில்தார் பணிகள் என்றால் என்ன - தாசில்தாரை நாம் வட்டாட்சியர் என்று கூறலாம். ஒரு சிலர் தாசில்தார் வேறு வட்டாட்சியர் வேறு என்பதை புரிந்து கொள்தல் அவசியமாகிறது. இவர் வருவாய் வட்டாட்சி உள்ளடக்கிய அனைத்து கிராம வருவாய் வட்டங்களை பார்த்து கொள்வார். இவர் மாவட்ட ஆட்சியர் எனப்படும் கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் இவர்களின் பணிகளுக்கு உதவி செய்வார். இவரும் இரண்டாம் நிலை கலெக்டர் என்றழைக்கப்படுகிறார். இவர் அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர் அல்லது ஆட்சி மாஜிஸ்ரேட் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாசில்தார் பணிகள் என்றால் என்ன


வட்டாட்சியர் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

1. இவருடைய முக்கிய பணி இவருக்கு கீழ் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் ( ஆர் ஐ ), கிராம நிர்வாக அலுவலர் ( வி ஏ ஓ ) மற்றும் இதர உதவியாளர்களை பணிகளை கண்காணித்தல் மற்றும் அவர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அதற்குண்டானதை கண்காணிப்பது இவருக்கு மிகவும் முக்கியமான பணியாக விளங்குகிறது.

2. சாதி சான்றிதழ், குடிமை சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், மதிப்பீடு சான்றிதழ் வழங்குதல்.

3. பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் வழங்குதல்.

4. பட்டா மாறுதலை பராமரித்தல்.

5. பொது நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்களின் வரிகளை வசூலித்தல்.

6. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்களின் போது பணிகள் மேற்கொள்தல்.

தாசில்தார் சம்பளம்

தாசில்தார் சம்பளம் எவ்வளவு என்றால் 37, 700 அடிப்படை சம்பளம் ஆகும். அனுபவம் மற்றும் பதவி உயர்வு, அகவிலைப்படி மற்றும் கிரேடு லெவல்  காரணமாக இவர்களுக்கு சம்பளம் ஏறிக்கொண்டே இருக்கும்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2022