தரிசு நிலம் என்றால் என்ன

தரிசு நிலம் என்றால் என்ன - தரிசு நிலம் என்பது ஒன்றுக்கும் உதவாத நிலம் என கூறலாம். நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆவது மக்கள் வீடுகளை கட்டி கொள்கிறார்கள் மற்றும் இதர பணிகளுக்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஆனாலும் தமிழகத்தில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர்கள் தரிசு நிலங்களாக இருக்கிறது. இந்த நிலத்திற்கு பயிரிலி, புழுதி பாடு, போடு கால் என பல்வேறு பெயர்களை கொண்டுள்ளது. ஏனென்றால் அ பதிவேட்டில் இது போன்ற பெயர்கள் வந்தால் அது தரிசு நிலம் என பொருள்.

தரிசு நிலம் என்றால் என்ன


இப்போது நீங்கள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வாழ்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பட்டா கிடைக்குமா ?

நூறு சதவீதம் இல்லாமல் 50 சதவீதம் உங்களுக்கு பட்டா கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் மொத்தம் இரண்டாக தரிசு நிலத்தை பிரித்து கொண்டுள்ளது. ஒன்று தீர்வை ஏற்பட்ட தரிசு மற்றும் தீர்வை ஏற்படாத தரிசு ஆகும். தீர்வை என்றால் வரி ஆகும். 

ஊரில் நிறைய இடம் தரிசு நிலங்களாக இருக்கிறது. எனக்கு நிலம் இல்லை எனக்கு கொடுப்பார்களா ?

பொதுவாக ஊர் எல்லையில் தான் தரிசு நிலங்கள் காணப்படும். அதும் காடு மாதிரியும் மற்றும் மக்கள் நடமாட முடியாத இடமாகவும் தென்படும். சர்வேயும் எடுத்திருப்பார்கள் அல்லது சர்வே செய்யமாலும் இருந்திருப்பார்கள். அரசு அ பதிவேட்டில் அந்த நிலங்களின் சர்வே, உட்பிரிவு எண்களும், வரைபடமும் இருக்கும் நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு எழுதி கொடுத்தால் ஒப்படை இனங்கள் மூலமாக உங்களுக்கு அந்த நிலங்கள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

எந்தெந்த நிலங்கள் தரிசு நிலம் என கண்டுபிடிப்பது ?

அரசு அ பதிவேட்டில் தான் இந்த மாதிரி பதிவுகள் இருக்கும். அதும் இல்லாமல் உச்ச வரம்பு நிலங்களையும் அரசு கையகப்படுத்தி தரிசு நிலங்களாக பதிவேட்டில் குறிப்பார்கள். இதை எல்லாம் VAO இடம் கேட்டு தெரிஞ்சிக்க வேண்டும்.

குறிப்பு

மற்ற நிலங்களின் பெயர்களும் அல்லது அதன் வகைப்பாடுகளும் கீழே கேள்வி வடிவத்தில் இருக்கிறது.

சிவல் நிலம் என்றால் என்ன

செம்மை நிறம் கொண்ட நிலத்தின் வகையை கொண்டது. அதாவது மக்கள் அதன் சிவந்த நிலம் என்றழைப்பார்கள்.

முரம்பு நிலம் என்றால் என்ன

நிறைய நிறைய கற்களை கொண்டு இருக்கும். மேட்டு பகுதிக்கு உட்பட்டவையாகும்.

அவல் நிலம் என்றால் என்ன

மிகவும் பள்ளமான நிலத்தின் தன்மையை உடையது.

சுவல் என்றால் என்ன

இதுவும் மேட்டு நிலம் எனலாம்.

அனாதீனம் நிலம் என்றால் என்ன