தாலிக்கு தங்கம் திட்டம் 2025 - திருமணமான பெண்களுக்கு நிதி உதவியாக தமிழக அரசு 50, 000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் கொடுத்து வருகிறது. இந்த பணம் பெண் வீட்டாரையே சேரும். அனைத்து திருமணமான பெண்களுக்கு ஒரே மாதிரி உதவித்தொகைகள் வராது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50, 000 ரூபாயும், 10 மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூபாய் 25, 000 வழங்கப்பட்டு வருகின்றன. இது கடந்த 1989 இல் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். அப்போது ரூபாய் 5, 000 மட்டுமே திருமண நிதி உதவித்தொகையாக அரசு கொண்டு வந்தது. நாளடைவில் 25, 000 மற்றும் 50, 000 என மாறியது. இதனால் பள்ளி மாணவிகள் மேல் படிப்பை தொடராமல் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் அதிகமாக இருந்தது.
உயர்கல்வி உதவித்தொகை 2025
இந்த தாலிக்கு தங்கம் திட்டம் பெயர் இப்போது உயர்கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்ற பட்டுள்ளது. வெறும் பெயர் மட்டுமே மாற்றபடவில்லை மாறாக ஒட்டுமொத்த மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம் இருந்ததை மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் உயர்கல்வியை தொடராமல் பாதியிலே அரசு பள்ளி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டம் இந்த வருடமே அதாவது 2022-2023 ஆண்டே செயல்படும் என்றும் இதனால் மாணவிகளும் அவர்கள் உயர்கல்வியை தொடருவார்கள் என கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் உதவித்தொகை வாங்க மாணவிகள் கட்டாயம் அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இது போன்ற உயர்க்கல்வி தொகை கிடைக்காது.
இதையும் வாசிக்க: விதவை மகள் திருமண உதவி திட்டம் விண்ணப்பம் Pdf
இந்த தாலிக்கு தங்கம் திட்டம் கீழ் வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் பயனாளிகள் மட்டுமே பயனடைந்தார்கள் என்றும் இந்த திட்டத்தை இப்போது மாற்றினால் சுமார் ஆறு லட்சம் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் நிதி அறிக்கையில் கூறி இருந்தார்கள். திருமண உதவி தொகை பெறுபவர்கள் 24 சதவீத மக்களே போலி இல்லாமல் இருப்பதாகவும் மற்ற போலி மோசடிகளை குறைப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிட்ருந்தார்கள்.
குறிப்பு
மற்ற திருமண உதவி திட்டங்களில் எந்த வித மாற்று கருத்து இல்லை. வழக்கம்போல் அதில் வரும் உதவித்தொகையை விண்ணப்பித்து பயனாளர்கள் பலனடைந்து கொள்ளலாம்.