தாலி வாங்க உகந்த நாள் 2025

தாலி வாங்க உகந்த நாள் 2025 ( thali vanga ugantha naal 2025 nalla naal ) - இதனை நாம் மாங்கல்யம் என்றும் அழைக்கலாம். இது தங்கத்தில் எடுக்கப்படும் முக்கியமான ஆபரணம் ஆகும். இதனை பெரும்பாலும் முகூர்த்த நாட்களில் எடுக்க மக்கள் ஆசைப்படுவார்கள். இது திருமணத்திற்காக எடுக்கப்படும் நகை என்பதால் இதில் பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதில் ஒரு சிலர் தாலியோடு சேர்த்து சரடும் தங்கமாக எடுப்பர். அப்படி எடுத்தாலும்  மாங்கல்யம் எடுத்தாலும் சரி ஒன்று தான். இதில் நாள் நட்சத்திரம் பார்க்ககூடிவார்கள் நிச்சயம்  அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருக்கின்றதா என்று பார்க்கலாம். மேலும் கரிநாள் வந்தால் அன்றைய தினம் நிச்சயம் தவிர்த்தல் நல்லது.

சற்று முன்: ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கம் வாங்க உகந்த நாள்

வியாழக்கிழமைகளில் முதல் ஓரை எனப்படும் குரு ஓரையில் எடுக்கலாம். பொதுவாகவே முதல் ஓரை நேரத்தில் எடுக்க முடியாது. ஏனெனில் காலை 06 மணி முதல் 07 மணி  வரையும் இருக்கும். ஆதலால் பிறகு வருகின்ற மூன்று ஓரைகளில் எது சரியாக இருக்கிறது என்று நினைக்கிறார்களோ அதனை தேர்வு செய்யலாம்.

சற்று முன்: தாலி எத்தனை கிராம் இருக்க வேண்டும்

ஒருவேளை வியாழக்கிழமை நாட்களில் நேரமில்லை என்றால் மற்ற நாட்களில் வருகின்ற குரு ஓரைகளில் தாலி அல்லது தங்கத்தை வாங்கி கொள்ளலாம்.

சற்று முன்: 1 பவுன் தங்கம் விலை