தை பொங்கல் 2026, தைப்பொங்கல் 2026 தேதி ( Thai pongal 2026 time wishes ) - தைப்பொங்கலை நாம் தமிழரின் திருநாளாக கொண்டாடுகிறோம். இதற்கு பல காரணங்களும் உண்டு. நமது முன்னோர்கள் ஆடி முதல் கார்த்திகை மாதங்கள் வரையும் நெற்பயிர்கள் நட்டு பின்பு அதனை அறுவடை செய்து வைத்திருப்பனர். இதன் முடிவு மார்கழியில் தான் வரும். அதாவது நெற்பயிர்களின் விலை, கொள்முதல் போன்ற முடிவுகள் மார்கழி இறுதியில் தான் கிடைக்கும். மேலும் இதற்கு அடுத்த நாள் தை 01 ஆம் தேதிக்கு முன்னர் வீடுகளை சுத்தம் செய்து இந்த நெற்பயிர்களை காத்து வந்தனர். அடுத்த நாள் தையில் சூரிய பகவானை கும்பிட்டு வேலைகளை தொடங்குவர். இதனால் தான் தைப்பொங்கல் என நாம் கொண்டாடி வர காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது நாம் கொண்டாடுகின்ற அனைத்து பொங்கலுமே ஒரு நேரத்தில் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நான்கு நாட்கள் வீதம் என்று கொண்டாடுகிறோம்.
பொங்கல் நல்வாழ்த்துகள்
தைப்பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் பானையில் சிறிதளவு பச்சரிசி மற்றும் வெல்லம் சேர்த்து அதனை பொங்க விடுகிறோம். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை மழையாக கொண்டு வரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் கடமை நமக்கு இருக்கிறது.
தைப்பொங்கல் 2026 தேதி மற்றும் நேரம்
இந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் வியாழக்கிழமை வருகிறது. பொங்கல் வைக்க உகந்த காலம் காலை 10.30 முதல் 11.11 வரை மட்டுமே.
கரி நாட்கள்
