தபால் அலுவலக எஃப்டி வட்டி விகிதம் 2024

தபால் அலுவலக எஃப்டி வட்டி விகிதம் 2024 - பயனாளர்கள் அல்லது மக்கள் அஞ்சல் துறையில் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கிறது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு சிலர் சேமிப்பு கணக்கினை மட்டும் தொடங்கி இருக்கின்றனர். போஸ்ட் ஆபிஸில் நிறைய நிறைய திட்டங்களில் முதலீடு செய்தால் சேமிப்பு கணக்கில் வரும் லாபத்தை விட இதில் ஒரு மடங்கு அதிகமாகவே வரும். இதில் மாத மாதம் வட்டி அல்லது வருடத்திற்கு வட்டி அல்லது ஒட்டுமொத்தமாக முதிர்வு தொகை கிடைப்பது போன்ற நல்ல திட்டங்கள் இருக்கிறது. இதில் நாம் இந்த பதிவில் டைம் பிக்ஸ் டெபாசிட் ஸ்கீம் பற்றி தான் பார்க்க போகின்றோம்.

1. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

2. ஒன்று, இரண்டு, மூன்று அல்லது ஐந்து வருடங்களின் திட்டம் உள்ளது. இதில் உங்களுக்கு எது விருப்பமோ அதனை செலக்ட் செய்து கொள்ள முடியும்.

3. ஆண்டில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படும்.

4. திட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் ஆறு மாதங்கள் காலம் முடிவடைந்தும் அதே சமயத்தில் 02 % வட்டி விகிதமும் குறையும்.

5. திட்டம் முடிந்த பிறகும் இடைவெளி இல்லாமல் உடனடியாக சேர முடியும்.

தபால் அலுவலக எஃப்டி வட்டி விகிதம் 2024


டெபாசிட் வட்டி விகிதம்

1. 1 வருடம் - 5.5%

2. 2 வருடங்கள் - 5.7%

3. 3 வருடங்கள் - 5.8%

4. 5 வருடங்கள் - 6.7%

உதாரணம்

நீங்கள் 1 லட்சம் ரூபாயை இதில் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி பணம் வரும் என்பதை கீழே பார்க்க முடியும்.

1. 1, 05, 614 ( 5, 614 ) - முதல்

2. 1, 11, 228 ( 11, 228 ) - இரண்டாம்

3. 1, 16, 842 ( 16, 842 ) - மூன்றாம்

4. 1, 34, 350 ( 34, 350 )   - ஐந்தாம்

குறிப்பு

வலது அடைப்புகுறியில் உள்ள தொகை அந்தந்த வருடத்திற்கான ஆண்டு வட்டியாகும். 1 லட்சம் நிலையான வைப்புக்கான மாதாந்திர வட்டி 467 ( 1 வருடம் திட்டம் ).

கிசான் விகாஸ் பத்திரம்