தமிழ்நாடு தலைமை செயலாளர் பெயர் 2025 - இந்திய ஆட்சிப்பணிகளில் முதன்மையான அதிகாரத்தில் தலைமை செயலாளர் இருப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தலைமை செயலாளரை நியமிப்பார்கள். இந்த பதவி இந்திய நாட்டின் 23 வது மிகப்பெரிய பதவியாகும். எப்படி இந்திய நாட்டின் முதல் மிகப்பெரிய பதவி குடியரசுத்தலைவரோ அதேபோல் நாட்டின் 23 மிகப்பெரிய பதவி இந்த Chief Secretary. இவர்களை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தான் பணியில் அமர்த்துவார். மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் இவர் நிர்வாகிப்பார். அதாவது சிவில் சர்வன்ட் ஆகிய அனைவரின் பொறுப்புகள், ஆலோசனைகள், யோசனைகள், கட்டளை போன்றவற்றை செய்யும் முழு அதிகாரமும் இவருக்கு உண்டு. எப்படி ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முதன்மையாக செயல்படுகிறாரோ அதே போல் தமிழகத்தில் உள்ள நிர்வாகத்தின் முதன்மையாக தலைமை செயலாளர் இருப்பார்.
பணிகள்
1. முதலமைச்சரின் ஆலோசகர் இவர்.
2. இவர் எந்த துறையை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். அதாவது தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு துறையின் செயல்பாடு அல்லது இதர பணிகளை நிறைவேற்ற இவர் ஆலோசனைகள் செய்யலாம்.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கு இவர் நிர்வாகம் செய்ய முடியும்.
4. முக்கியமான பதவிகளாக கருதப்படும் மாவட்ட ஆட்சியர், சப் கலெக்டர் மற்றும் இதர உயர்வான பதவிகளை நியமனம், இடைக்கால நீக்கம், இட மாற்றம் செய்யலாம்.
5. ஆளுநர் அடுத்தபடியாக இவருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் பணிகள்
தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் பெயர் 2024
தற்போதைய தலைமை செயலாளர் பெயர் மாண்புமிகு திரு. சிவ்தாஸ் மீனா அவர்கள் இருக்கிறார். இவர் ஜூலை 01, 2023 அன்று பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே நகராட்சி நிர்வாக துறை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 49 வது தலைமை செயலாளர்கள் இதுவரை பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமை செயலகம் முகவரி 2025
ஜார்ஜ் கோட்டை, சென்னை, 600009 பின்கோடு என்கிற இடத்தில் தான் இந்த அரசு தலைமை செயலகம் உள்ளது.
தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது