தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110, 111, 131, 203, 205

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110, 111, 131, 131(2), 203 மற்றும் 205 Pdf, 206, 172 - ஒவ்வொரு சட்டங்கள் படி தான் நாம் அனைவரும் செயல்படுகிறோம். அதேபோன்று ஊராட்சி சட்டமும் இயங்கி வருகிறது. இது முழுக்க முழுக்க கிராம பஞ்சாயத்து தலைவர், உதவியாளர்கள், ஆய்வாளர், செயலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மக்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும். என்னதான் இத்தனை பேர் இருந்தாலும் இதில் தலைவருக்கே அதிகப்படியான சட்டங்களின் பிரிவு இருக்கும்.


இந்த புத்தகம் மொத்தம் 262 பிரிவுகளும் மற்றும் 13 அத்தியாயங்களும் கொண்டு இருக்கும். 262 சட்ட பிரிவுகளும் இருந்தாலும் இதில் உட்பிரிவுகளும் அடங்கி உள்ளன. இதில் மிகவும் முக்கியமான சட்டங்களை நாம் தெரிந்து இருப்பது அவசியமே. அவற்றில் 110, 111, 131, 203 மற்றும் 205 சட்டங்களை கீழே காண்போம்.

வார்டு உறுப்பினர்கள் பணிகள் மற்றும் கடமைகள் Pdf

பிரிவு 110

ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் அடிப்படை மற்றும் கட்டாய கடமைகளை செய்ய வேண்டும். உதாரணமாக குடிநீர் குழாய் மற்றும் தண்ணீர் பிரச்சனையை சரி செய்தல், சாலை பராமரிப்பு, பாலங்கள் கட்டுதல், தெருவிளக்கு அமைப்பது போன்றவைகளை கட்டாயம் இவர் செய்து தர வேண்டும்.

பிரிவு 111

இந்த பிரிவு கட்டாயமாக்கப்படாத கடமைகள் ஆகும். அதாவது இவர் விருப்பத்தால் செய்யும் கடமைகள் அதாவது மரங்கள் நடுதல் மற்றும் இதர விஷயங்களை செய்து தருதல் போன்றவை ஆகும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2023

பிரிவு 131

பொது சாலை அல்லது பாதையை யாராவது ஆக்கிரமித்தால் அவற்றினை அகற்றம் செய்யலாம். எடுத்துக்காட்டாக தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ பொது பாதை இடத்தில் மதில் சுவர் எழுப்புதல், வேலி அமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவற்றினை அகற்ற இவருக்கு அதிகாரம் உண்டு. மேற்படி கிராம நிர்வாக அலுவலரிடமும் இவர் புகாரை தெரிவிக்கலாம்.

பிரிவு 203

ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டால் அல்லது முறைகேடு செய்வது தெரிந்தால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இவருக்கு காசோலை வழங்கும் அதிகாரத்தை பறித்து கொள்வார்.

பிரிவு 205

ஊராட்சி மன்றத்திற்கு செய்யக்கூடிய வளர்ச்சி திட்டங்களுக்கான பணம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் முறைகேடாக ஏதாவது செய்வது அறிந்தால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இவரின் பதவியை நீக்குவார்.

பஞ்சாயத்து தலைவர் அதிகாரங்கள் Pdf