தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம் எண்ணிக்கை 2024

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம் எண்ணிக்கை 2024 எத்தனை - தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஊராட்சி ஒன்றியம் மற்றதை விட தனித்துவமாக உள்ளது. ஏனெனில் ஒட்டுமொத்த கிராம ஊராட்சிகளை கண்ட்ரோல் செய்வது இந்த ஒன்றியம் தான். இதன் கீழ் 12, 000 க்கும் மேலான கிராமம் ஊராட்சிகள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 385 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம் எண்ணிக்கை


ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் இவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள். இவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களால் மறைமுக தேர்தல் மூலம் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுகிறார். இவரைப்போலவே துணை ஊராட்சி ஒன்றிய தலைவரும் செலக்ட் செய்யப்படுகிறார். இவர்களின் மொத்தம் பதவிக்காலங்கள் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆகும். சிலர் ஊராட்சி மன்றம், ஒன்றியம் ஒன்றே என நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்றியம் வேறு மன்றம் வேறு என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாவட்ட ஊராட்சி எண்ணிக்கை 2024

இவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கணக்காளர், செயலாளர், மேம்பாட்டாளர் மற்றும் இந்த ஊராட்சி ஒன்றிய தலைவரும் சேர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்களே வழிநடத்துவார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் குறைந்தபட்சம் நான்கு அதிகபட்சம் இருபத்து நான்கு ஒன்றியங்கள் செயல்படுகின்றன. இவருக்கு ரூபாய் 10 லட்சம் வரையும் பொது நிதியிலிருந்து செலவு செய்ய அதிகாரம் உண்டு. அதற்கு மேல் செலவு செய்தால் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை வேண்டும்.

பணிகள்

1. பொது சம்மந்தப்பட்ட சேவைகள்

2. குடிநீர்

3. சாலை மேம்பாட்டு திட்டம்

4. பசுமை வீடு திட்டம்

5. மற்ற பொது திட்டங்கள் மட்டுமே.

குறிப்பு

இந்த பணிகள் மொத்தமாக பொதுவாக அதாவது மக்கள் அனைவரும் உபயோகிக்கும் திட்டமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட நபர் பிரச்சனைகளை உங்கள் ஊரில் உள்ள கிராம ஊராட்சியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் மனுக்களை கொடுக்கலாம்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?

தற்போது வரையும் விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தினை தக்கவைத்துள்ளது. மொத்தமாக விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியம் உள்ளன.

வருவாய் கோட்டாட்சியர் பணிகள்