தமிழ்நாடு மணல் இணைய சேவை 2024

தமிழ்நாடு மணல் இணைய சேவை 2024 - வீடு கட்டுவதற்கும் கடைகள் கட்டுவதற்கும் சாலைகளில் சுவர்கள், தடுப்பு சுவர்கள், தூண்கள், பெரிய மேம்பாலங்கள் என அனைத்திற்குமே மணல் தேவைப்படுகிறது. ஆனால் மணலின் விலை சற்று எதிர்பாராமல் ஏறிக்கொண்டே செல்கிறது. இதில் பெரும்பாலும் வீடு கட்டுவதற்காக மக்கள் அதிக அளவில் போராடி கொண்டே தான் இன்றளவும் உள்ளனர். அதனால் தமிழக அரசு சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில், இனி மணல் சேவையை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என்றும் அதற்கு கட்டணமாக ஒரு யூனிட்க்கு ஆற்று மணல் விலை 2022 இன் படி பார்த்தால் 1000 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனை 2017 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு மணல் இணைய சேவை 2024


மணல் வாங்குவது எப்படி 2024

இதில் நாம் பொதுமக்கள் மற்றும் லாரி ஓனர் இவற்றில் ஏதாவது ஒன்றை Tnsand வெப்சைட்டில் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். லாரியின் கொள்ளளவு, காலி எடை, மொத்த எடை, எத்தனை யூனிட், என்ஜின் எண் போன்ற தகவல்கள் அனைத்தும் கொடுத்து ஆக வேண்டும்.

சதுர அடி கணக்கிடுவது எப்படி

மணல் குவாரி திறப்பு 2024

இதில் பதிவு செய்த பின்னர் எத்தனை நாள், எந்த குவாரியில் மணல் எடுக்கலாம் என்கிற செய்தியை உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்புவார்கள். அப்படி அனுப்பும்போது சாலையிலும் குவாரியிலும் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. இதனால் அலைப்பு மற்றும் நேரங்கள் மிச்சம் ஆகும். ஒருவேளை எந்த வித செய்தியும் உங்களுக்கு வர வில்லை என்றால் 044 - 40905555 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மணல் பதிவு செய்வது எப்படி 2024

இதனை பதிவு செய்வதற்கு உண்டான நேரங்கள் என்று பார்த்தால் காலை 10 மணி முதல் மதியம் 02 மணி வரையும் மட்டுமே. ஏற்கனவே பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு மதியம் 02 மணி முதல் மாலை 05 மணி வரையும் செயல்படும். ஒரு சில நேரத்தில் வெப்சைட் ஓபன் ஆகவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்து பார்க்க வேண்டும். பிறகு மணல் பதிவு முழுவதும் நிரம்பி விட்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கழித்து தொடர வேண்டும்.

தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் 2024