தமிழ்நாடு மக்களவை தொகுதி எண்ணிக்கை

தமிழ்நாடு மக்களவை தொகுதி எண்ணிக்கை - மக்களவை என்றால் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் அவை ஆகும். இது கீழ் அவை அல்லது லோக் சபா என்று இந்திய அரசினால் அழைக்கப்படுகிறது. மக்களவை பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் துணை இல்லாமல் எந்த வித செயல்களை செய்ய முடியாது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதிக்கேற்ப உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மக்களவையில் அமர செய்வார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த மக்களவை அதாவது பாராளுமன்ற தேர்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவார்கள். அதில் வெற்றி பெரும் உறுப்பினர்களை மக்களவையில் அமர்த்துவார்கள். வெற்றி பெரும் நபர் மக்களவை உறுப்பினர் என்றழைக்கப்படுகிறார்.

தமிழ்நாடு மக்களவை தொகுதி எண்ணிக்கை


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 39 தொகுதிகளே மட்டுமே உள்ளன. பிறகு ஏன் 40 தொகுதிகள் என்கிறார்கள் என்னும் கேள்வி அவ்வப்போது மக்கள் மனதில் எழும். அதாவது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களை சேர்த்து 40 தொகுதிகள் இருக்கிறது என்பது அர்த்தமாகும். மறுசீரமைப்பு சட்டம் முறைப்படி தொகுதிகளை நீக்கி இருந்தாலும் தமிழகத்தில் 39 தொகுதிகளே காணப்படுகிறது.

40 தொகுதி பெயர்கள்

1. தருமபுரி

2. கிருஷ்ணகிரி

3. அரக்கோணம்

4. காஞ்சிபுரம்

5. திருப்பெரும்புதூர்

6. மத்திய சென்னை

7. வட சென்னை

8. தென் சென்னை

9. திருவள்ளூர்

10. கன்னியாகுமரி

11. திருநெல்வேலி

12. தென்காசி

13. தூத்துக்குடி 

14. இராமநாதபுரம்

15. விருதுநகர்

16. மதுரை

17. சிவகங்கை

18. தஞ்சாவூர்

19. நாகப்பட்டினம்

20. மயிலாடுதுறை

21. சிதம்பரம்

22. கடலூர்

23. பெரம்பலூர்

24. திருச்சிராப்பள்ளி

25. கரூர்

26. தேனி

27. திண்டுக்கல்

28. பொள்ளாச்சி

29. கோயம்புத்தூர்

30. நீலகிரி

31. திருப்பூர்

32. ஈரோடு

33. நாமக்கல்

34. சேலம்

35. கள்ளக்குறிச்சி

36. விழுப்புரம்

37. ஆரணி

38. திருவண்ணாமலை

39. வேலூர்

40. புதுவை.

குறிப்பு

இதில் ஏழு தனித்தொகுதிகளாக தமிழக மக்களவையில் பிரிக்கப்படுகிறது. இதேபோன்று சட்டமன்றதொகுதிகளில் 46 மற்றும் இந்திய நாடாளுமன்ற 545 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 131 மக்களவை தொகுதிகள் தனியாக விளங்குகின்றன.

மக்களவை சபாநாயகர் பெயர் 2022