தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024 ( ஊதிய உயர்வு 2024 எப்போது ) - அரசாங்க ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி எனும் DA பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். அந்த வகையில் சென்ற வருடமே DA ஏற்றக்கூடும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. தற்போது அகவிலைப்படி ஏற்றம் குறித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இருந்த அகவிலைப்படியோடு கூடுதலாக நான்கு சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது 38 ஆக இருந்த அகவிலைப்படியை தற்போது 42 சதவீதமாக தமிழ்நாடு அரசு உயர்த்த வழிவகுத்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2024


இதனால் அரசாங்கத்திற்கு ரூபாய் 2366 கோடி செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதோடு குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

இதையும் பார்க்க: அகவிலைப்படி கணக்கிடும் முறை

மேலும் இது ஏப்ரல் 01, 2023 அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய அரசு அகவிலைப்படி ஏற்றினால் தமிழ்நாட்டிலும் ஏற்றம் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.