சீரகம் விலை நிலவரம் 2024 - என்னதான் சீரகம் விலை கூடினாலும் நாளுக்கு நாள் மக்கள் அதனை பயன்படுத்தி தான் வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில் சாப்பிடும் உணவு பழக்கங்கள் ஏனோ தானோ என்று இருக்கிறது. ஆனாலும் கிராமப்புறங்களில் இன்றளவும் சீரகம் போட்டு தான் உபயோகித்து அதில் வரும் நன்மைகளையும் பெறுகின்றனர். சீர் கூட்டல் அகம் சேர்ந்தது தான் இந்த சீரகம். அதாவது அகத்தில் உள்ள பிரச்சனைகளை சீராக வைப்பதற்கு இது பயன்படுகிறது.
இதில் உள்ள நன்மைகள் என்று பார்த்தால் நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு, இரத்த அழுத்தம் சீராக, பொட்டாசியம், ஹீமோகுளோபின் அளவு, இரத்த சோகை, உடலுக்கு புத்துணர்ச்சி, கால்சியம், செலினியம், மாங்கனீஸ் மற்றும் இன்றயை பல பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனையாக கருதப்படும் தலைமுடி உதிர்வு, நரைமுடி போன்றவைகளையும் சரி செய்யும் வல்லுமை இது பெற்றுள்ளது. இது மட்டுமா உள்ளது என்றால் நிச்சயம் இல்லை. முக்கியமான சுண்ணாம்பு சத்து இருப்பதால் எலும்புகள் மிகவும் வலுவடையும்.
புளி விலை இன்று 2024
காலையில் வெறும் வயிற்றில் இந்த சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு பின்னர் ஆறிய பின்னர் அதனை வடிகட்டி பருகினால் செரிமான பிரச்சனை எப்பொழுதும் வரவே வராது. அது மட்டுமா மனிதனின் மொத்த உடல் ஆராக்கியத்தினையும் இந்த சீரகம் பார்த்து கொள்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
ஆமணக்கு சந்தை விலை 2024
நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் சிறிய பொட்டலம் ( சிறிய பாக்கெட் ) ரூபாய் 5 க்கும், கால் கிலோ 50 லிருந்து 75 வரையும், கிலோ கணக்கில் வாங்கினால் ரூபாய் 230 லிருந்து 250 க்கும் விற்கப்படும். என்னதான் கிலோ 250 க்கு விற்றாலும் அதனை மக்கள் முழுவதுமாக பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலே இந்த சீரகம் வரும்.