சாலை ஆக்கிரமிப்பு புகார் சட்டம் 2024

சாலை ஆக்கிரமிப்பு புகார் சட்டம் மனு எழுதுவது எப்படி - சாலை என்பது பொது பாதையாக மக்கள் பயன்படுத்தவதற்காக மட்டுமே. ஆனால் ஒரு சிலர் அதனை அபகரிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் அதனையும் சேர்த்து கிரயம் செய்து வருகின்றனர் அல்லது அதனை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களோ அல்லது அவர்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.

சாலை ஆக்கிரமிப்பு புகார் சட்டம்


அரசு புறம்போக்கு நிலங்களையோ அல்லது பொது பயன்பாட்டிற்க்காக இருக்கின்ற கட்டிடங்களையோ அல்லது இடத்தையோ தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனமோ அதனை ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது. இதேபோல் நீர்நிலை, மேய்ச்சல் மற்றும் இதர அரசு நிலங்களை ஆக்கிரமிப்புகள் செய்பவர்களுக்கு அரசாணை எண் 540 யை பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.

இதையும் பார்க்க: அங்கீகாரம் அற்ற மனை பிரிவுகளை கிரயம் செய்யும் முறை

இந்த ஆக்கிரமிப்புகள் உங்கள் தெருவிலோ, ஊரிலோ அல்லது நகரத்திலோ எங்கு இருந்தாலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும். மனு அனுப்பிய 90 நாட்களுக்குள் மேலே இருந்தால் கோட்டாட்சியருக்கு மனு செய்ய வேண்டும். அங்கேயும் எந்த வித நடவடிக்கைகள் எடுக்காவிடில் சீராய்வு கூட்டம் மூலம் மனு செய்ய வேண்டும். எங்கேயேயும் நடவடிக்கைகள் எடுக்காவிடில் பொது நல வழக்கு தொடரலாம்.

குறிப்பு

நீங்கள் எழுதிய மனுவின் நகல்களை இரண்டு அல்லது மூன்று நகல் எடுத்து வைத்து கொள்தல் அவசியமாகும்.

இதையும் பார்க்க: புறம்போக்கு நிலத்தில் பாதை