புறம்போக்கு நிலத்தில் பாதை

புறம்போக்கு நிலத்தில் பாதை - புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி இருப்பின் அல்லது வாழ்ந்து வந்தாலும் முறையான பட்டா மற்றும் பத்திரத்தினை பதிவு செய்திருத்தல் அவசியமாகும். நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு மட்டுமே பட்டாவானது பட்டா மற்றும் பத்திரம் கொடுக்கப்படும். மற்ற ஆட்சபகரமான புறம்போக்கு நிலங்களில் பட்டா மற்றும் பத்திரம் கிடைப்பது அரிது.

புறம்போக்கு நிலத்தில் பாதை


ஏதாவது ஒரு அரசு புறம்போக்கு நிலங்களில் பாதை இருப்பின் அது பொது பாதை ஆகும். அந்த பாதையை தனி ஒரு நபர் அல்லது தனி நிறுவனமோ ஆக்கிரமணம் செய்யக்கூடாது.

இதையும் பார்க்க: புறம்போக்கு நிலம் பட்டா வழங்க அரசாணை

உங்கள் நிலத்தில் அல்லது மனையில் பாதை இருந்தால்

நத்தம் அல்லது வேறு ஏதாவது அரசு புறம்போக்கு நிலங்களில் பாதைகள் இருந்தால் அது பொது பாதையாகவே கருதப்படும். உதாரணமாக வண்டிப்பாதை, சாலை, நிலவியல் அல்லது பூஸ்துதி பாதை என்று உங்கள் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது பொது பாதையாகவே கருதப்படும்.வேறு மாற்று பாதை இருந்தால் பரவாயில்லை. உங்கள் நிலத்தை தாண்டி தான் செல்ல வேண்டுமென்றால் நிச்சயம் அந்த பாதைக்கு வழி விட்டு தான் ஆக வேண்டும்.

இதையும் பார்க்க: தமிழக அரசு வீடு வழங்கும் திட்டம்