புறம்போக்கு நிலம் பட்டா வழங்க அரசாணை

புறம்போக்கு நிலம் பட்டா வழங்க அரசாணை ( purampokku patta go tamilnadu ) - அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு அவ்வப்போது அரசாணை, முகாம் அல்லது செய்தியை தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய் துறையானது வெளியிடுகிறது. இதில் 2018 ஆம் ஆண்டு வந்த ஒரு அரசாணையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

புறம்போக்கு நிலம் பட்டா வழங்க அரசாணை


அரசாணை எண் 465 இன் படி, ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளில் வீடு இல்லாத மக்கள் வாழ்ந்து வந்தால் அவர்களுக்கு இலவச பட்டா அல்லது வேறு ஒரு இடத்தில் மறுகுடிபெயர்வு செய்யலாம் என்று வருவாய்த்துறை கூறியுள்ளது.

இதையும் பார்க்க: Tamilnilam

1 லட்சம் ஆண்டு வருமானம் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். கிராம புறங்கள் என்றால் 4 சென்டும், நகர்புறங்களில் வசித்தால் 2. 5 சென்டும் மற்றும் பெரு மாநகரங்களில் வசித்தால் 2 சென்டும் அரசு சார்பில் தரப்படும் என்று 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு

இந்த அரசாணையில் வந்துள்ள செய்தி எப்போது நடைமுறைக்கு வருகிறதோ அப்போதிலிருந்து ஆறு மாதம் மட்டுமே செயல்படும்.

இதையும் பார்க்க: Tnreginet. gov. in patta