புலப்படம் பார்க்க 2024 - புலப்படம் என்பது ஒரு நிலத்தின் துல்லியமான வரைபடம் அல்லது புகைப்படமாகும். நில மறு அளவை செய்து யூ டி ஆர் க்கு பின்னர் வந்த நிலங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டதில் இருந்து புலப்படம் ஆன்லைனிலே நம்மால் எடுத்து கொள்ள முடியும். புலப்படம் ஆன்லைனில் வரவில்லை எனில் நாம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அல்லது விண்ணப்பம் கொடுத்து தான் வாங்கி கொள்ள முடியும்.
எப்படி பட்டா, சிட்டாவை நாம் ஆன்லைனில் எடுத்து கொள்கின்றோமோ அதேபோல் தான் இந்த புல படமும் எடுக்க வேண்டும். ஆனால் பட்டாவை காண மூன்று options கள் நமக்கு இருக்கும். பட்டா எண், சர்வே எண் மற்றும் உரிமையாளர் பெயர் இவைகளில் ஒன்று தெரிந்தாலே பட்டாவை நாம் எடுக்கலாம். இந்த புலப்படத்தை பொறுத்தவரையில் சர்வே எண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் எடுக்க முடியாது.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா
உங்கள் நிலத்தின் சர்வே எண் தெரியாதவர்கள் Eservices என்கிற இணையத்தளத்தில் சென்று மேலே கூறிய மூன்று options இல் ஏதாவது ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்து கொண்டால் பட்டா உங்கள் screen இல் காட்டும். அச்சமயம் பட்டாவில் சர்வே எண், உட்பிரிவு எண் நிச்சயமாக இருக்கும். சர்வே எண் தெரிந்ததும் புலப்படத்தை எடுத்து கொள்ளுங்கள்.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா எடுத்தல்