பிளாட் அப்ரூவல் வாங்குவது எப்படி

பிளாட் அப்ரூவல் வாங்குவது எப்படி - முதலில் பிளாட் அப்ரூவல் மற்றும் அனுமதி வேறு என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றே என நினைத்து கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிளாட் அப்ரூவல்  வாங்கினால் கட்டிட அனுமதி போதுமானது என நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பது முற்றிலும் தவறு.

ஒரு மனை சரியான இடத்தில் அமைந்திருக்கிறதா, அரசு சேவைகளெல்லாம் கிடைக்குமா, சாலை தூரம் 30 அடி உள்ளதா என ஆராய இந்த பிளாட் அப்ரூவல் அவசியமாகின்றது.

பிளாட் அப்ரூவல் வாங்குவது எப்படி


இந்த பிளாட் அப்ரூவல் இருந்தால் தான் அனைத்து சேவைகளும் பெற முடியும். மேல் பத்தியில் கூறியுள்ள சேவைகளும், லோன் அப்ளை செய்ய, மின்சார வசதி பெற இது கட்டாயமாக கருதப்படுகிறது.

இதையும் பார்க்க: மனை வரன்முறை திட்டம்

இந்த அப்ரூவல் வாங்க அந்தந்த நகர் உள்ளாட்சி குழுமம் அமைந்துள்ளது. அங்கு சென்று உங்கள் மனை வரி, நகல் பத்திரம், பட்டா, லேஅவுட் மற்றும் அங்கேயே படிவம் அனைத்தும் கொடுத்து சேவை  கட்டணமாக ரூபாய் 500 கட்ட வேண்டும்.

இதையும் பார்க்க: கட்டிட வீடு அப்ரூவல் வாங்குவது எப்படி