பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு விவசாய கடன் பெறும் விண்ணப்பம்

பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு விவசாய கடன் பெறும் விண்ணப்பம் - மத்திய அரசு எப்போதும் விவசாயிகளுக்கு பற்பல நன்மைகளை அவ்வப்போது செய்து கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகளும் நன்மை அடைந்து வருகின்றனர் என்பதே உண்மை. ஏற்கனவே வருடா வருடம் ரூபாய் 6,000 நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த திட்டத்தின் பெயர் கிசான் திட்டமாகும். மேலும் இதனை விரிவுபடுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை அவ்வப்போது மக்களிடையே கூறி வருகிறது. அதில் ஒன்று தான் கிசான் கடனுதவி திட்டம் ஆகும்.

பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு விவசாய கடன் பெறும் விண்ணப்பம்


கிசான் திட்டம் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டாலும் நிறைய விவசாயிகள் அதில் இணைய முன்வரவில்லை. இதனால் 24.04.2022 அன்று முதல் 01.05.2022 அன்று வரையும் நடக்கும் சிறப்பு முகாம் கூட்டத்திலும் மற்றும் கிராம சபை கூட்டத்திலும் புதியதாக விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக அக்கௌன்ட் ஓபன் செய்து தருவதாக ஒன்றிய அரசு செய்தி வெளியீடு எண் 661 இல் குறிப்பிட்டுள்ளார்கள். அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டுமென்றால் பொது இ சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.

கிசான் கார்டு வாங்குவது எப்படி

அக்கௌன்ட் ஓபன் செய்த குறைந்த நாட்களுக்குள் விவசாயிகள் வேளாண்மை நோக்கத்தோடு எந்த வித பொருள்களை வாங்குவதற்கும் ரூபாய் 1.60 லட்சம் வரையும் தேசிய மயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கொள்ள முடியும் என்றும் கிட்டத்தட்ட 7 சதவீதம் வரையும் வட்டிகள் வசூல் செய்யப்படும் என்றும் அதில் கூறி இருந்தார்கள். முறையாக தவணை செலுத்தி வரும் நிலையில் அதிலிருந்து 3 சதவீதம் வரையும் வட்டி மானியம் கழிக்கப்படும் என்றும் பிறகு 3 லட்சம் வரையும் கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

விவசாய டிராக்டர் மானியம் 2022