பிக்மி எண் பெறுவது எப்படி 2024

பிக்மி எண் பெறுவது எப்படி 2024 - பிக்மி எண் என்பது கர்ப்பமான பெண்களுக்கு தமிழக மருத்துவ அரசாங்கம் சார்பில் கொடுப்பது ஆகும். இதனை பெற எந்த வித ரெஸ்ட்ரிக்ஷன் இல்லை. இதற்காக தமிழக அரசு அட்டை ஒன்றை கிராம புற செவிலியர் மூலம் அல்லது நகர்ப்புற செவிலியர் மூலம் தாய்மார்களுக்கு வழங்குவார்கள். இதில் RCH ID என்று பன்னிரண்டு எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

பிக்மி எண் பெறுவது எப்படி 2024


உங்களுக்கு RCH ID யை நீங்கள் அப்ளை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் ஊரில் கிராம புறங்கள் மற்றும் நகர் புறங்கள் வசிக்கும் செவிலியரே இதனை விண்ணப்பித்து உங்கள் கையில் அந்த அட்டையை கொடுத்து  விடுவார்கள்.

இந்த பன்னிரண்டு இலக்க எண்கள் இருந்தால் தான் உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் மகப்பேறு உதவி தொகையும் வந்து சேரும். ஒருவேளை நீங்கள் ரெஜிஸ்டர் அல்லது தாய் சேய் அட்டை போடவில்லை எனில் இந்த இரண்டுமே கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிக்மி எண் வராதவர்களுக்கு அரசாங்கம் புதிய யுக்தியை கையாள்கிறது. அது என்னவென்றால் ஆன்லைனிலே பிக்மி எண் பெறுவதற்கு இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த ஆன்லைனில் வெப்சைட் பெயர் Picme.tn.gov.in ஆகும். அதில் கர்ப்பிணி பெண்கள் முன் பதிவு செய்து உங்களுக்கான எண்ணை எடுத்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கீழ்காணும் விவரங்கள் அனைத்தும் அதில் உள்ளிட வேண்டும்.


1. பெயர் 

2. கட்டிட எண் 

3. அடுக்ககம் எண் 

4. தெரு பெயர் 

5. மாவட்டம் 

6. நகராட்சி 

7. VHN 

8. தொலைபேசி எண் 

9. மின்னஞ்சல் 

10. அஞ்சல் குறியீடு 


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சரியானதாக கொடுக்கப்பட வேண்டும். மேலும் அதனை தவிர்த்து கணவன் மனைவியின் இருவரின் ஆதார் அட்டை, வங்கி புத்தகம் கொடுக்கப்பட வேண்டும்.

முத்துலட்சுமி ரெட்டி திட்டம்

பட்டா சிட்டா