பேருந்து வசதி வேண்டி விண்ணப்பம் கடிதம் Pdf - நகர்ப்புறங்களில் மற்றும் பெரிய பெரிய மாநகரங்களில் ஒரு சில இடங்களில் அல்லது ஒரு சில பகுதிகளில் மட்டும் தான் பேருந்து வசதி இன்றளவும் கிடையாது. ஆனால் கிராமப்புறங்களை பொறுத்தவரையில் பாதியளவு பேருந்து வசதிகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் பெருமளவில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். இதனை நீங்கள் உங்கள் கடிதத்தை எழுதுவதன் மூலம் தீர்வுகளை காண முடியும். இதில் நீங்கள் நிழற்குடைக்கான விண்ணப்பத்தையும் எழுத முடியும்.
விடுநர்
உங்கள் பெயர் அல்லது உங்கள் ஊரின் பெயர்,
முகவரி.
பெறுநர்
உதவி மேலாண்மை இயக்குனர் அவர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
அரசு போக்குவரத்து கழகம்,
முகவரி.
பொருள் - பேருந்து வசதி, பேருந்து நிறுத்தம் வேண்டி கடிதம் அல்லது பேருந்து நிழற்குடை வேண்டி விண்ணப்பம்.
குறிப்பு
இவைகளில் எந்த பிரச்சனையோ அந்த பிரச்சனையை தெளிவாக குறிப்பிட்டு எழுதுதல் கட்டாயம். எழுத்து பிழைகள் அல்லது திருத்தல்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லது.
மதிப்பிற்குரிய ஐயா,
நான் அல்லது நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றோம். கிட்டத்தட்ட 2000 மக்கள் தொகை வீதம் இங்குள்ளனர். எங்களின் பணிகளை செய்வதற்கு நாங்கள் நகராட்சி அல்லது பேரூராட்சிக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. மேலும் எங்கள் பகுதிகளில் பேருந்து வசதி, பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை ஏதும் இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமத்திற்கு உட்பட்டு இருக்கிறோம். எங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு எங்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மின்சாரம் புகார் மாதிரி கடிதம்