பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி ( Patta request letter format in tamil tamilnadu pdf ) - அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா கிடைக்க வட்டாட்சியருக்கு நாம் மனு எழுத வேண்டும் . ஆனால் ஆட்சேபனையற்ற நிலங்களுக்கு மட்டுமே பட்டா கிடைக்கும். ஆட்சேபனையுள்ள நிலங்களுக்கு பட்டா கிடைப்பது என்பது சந்தேகமே.
2018 ஆம் ஆண்டு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அரசாணை நிலை எண் 496 இன் படி புறம்போக்கு நிலங்களில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
பட்டா வேண்டி மனு
விடுநர்
பெயர்,
முகவரி.
பெறுநர்
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
முகவரி.
பொருள் - நத்தம் பட்டா அல்லது வேறு பட்டா வழங்க கோரி மனு
நான் மேற்கண்ட முகவரியில் 10 வருடங்களுக்கு மேல் வசித்து வருகிறேன். அதில் நான் வீடு கட்டி குடியேறி உள்ளேன். அதற்கு பட்டா கிடைக்காமல் மிகவும் கஷ்டபட்டு வருகிறேன். எனது மனை புல எண் 34 ( உதாரணம் ) மற்றும் உட்பிரிவு எண் 34A ஆகும். எனது கோரிக்கையை ஏற்று எனக்கு பட்டா வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா
இணைக்கப்பட்டுள்ள ஆவண நகல்கள்
1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் அட்டை
3. வீட்டு வரி ரசீது
4. குடும்ப அட்டை.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா எடுத்தல்