Patta sirappu mugam 2023 apply online tamilnadu - வருவாய்துறையில் கொடுக்கப்படும் பட்டா ஆவணம் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகின்றது. ஒரு நிலம் அல்லது மனையின் உரிமையாளர் என்பதை பட்டா உணர்த்துகிறது. மேலும் பத்திரம் பதிவு செய்ய, வங்கிகளில் லோன் வாங்க, மின் இணைப்பு பெற என பல்வேறு காரணங்களுக்காக பட்டாவானது பயன்படுத்தப்படுகின்றது.
இலவச பட்டா, நத்தம் பட்டா மாற்றம், தோராய பட்டா, பட்டா பிழை திருத்தம் என பல்வேறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சிறப்பு முகாமின் மூலம் நாம் தீர்த்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் 100 இடங்களுக்கு மேலாக இந்த இலவச பட்டா முகாமானது நடைபெறும்.
இதையும் பார்க்க: கட்டிட வரைபட அனுமதி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேதிகள் மாறுபடும். அதனை தெரிந்துகொள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் வெப்சைட்டில் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். அதனை தெரிந்து கொண்டு இந்த இலவச பட்டா முகாமின் மூலம் உங்கள் பட்டா பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம்.
இதையும் பார்க்க: தமிழ்நாடு வட்டங்கள் எண்ணிக்கை 2023